பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 183 புகுந்தருளி அடியேற்கு அருள் செய்தான் என்று அடிகளார் கூறிச் செல்கிறார். ஒருவன் என்ற சொல்லுக்கு, தனித்து நிற்கும் ஒருவன் என்ற பொருளும், ஒப்புமை காட்ட முடியாத ஒருவன் என்று பொருளும் உண்டு. மகாப்பிரளய காலத்தில் தான் ஒருவனாய் நிற்கும் இவனே மறுபடியும் படைப்புக் காலத்தில் அகன்று விரிந்து நிற்கும் பிரபஞ்சமாய்த் தோன்றுகிறான் என்றார். இதே கருத்தை முன்னரும் 'ஏகன் அநேகன் இறைவன்’ (திருவாச :1-5) என்று கூறியுள்ளார். ‘விரிந்தோன்' என்று கூறியமையின் அப்பிரபஞ்சம் முழுவதும் அவன் வடிவாகவே உள்ளது என்ற கருத்தையும் தெரிவித்தார். அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க அரியதின் அரிய அரியோன் காண்க மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க நூலுணர்வு உணரா நுண்ணியோன் காண்க (45-49) அணுவைவிடச் சிறியவன்; தனககு ஒப்புமை. இல்லாதவன், ஈசன் என்று போற்றப் பெறுபவன்; அரியவை என்று சொல்லப்படுபவை அனைத்திற்கும் அரியவனாய் நிற்பவன்; பிரபஞ்சத்தில் தோன்றி மறைகின்ற எல்லாப் பொருள்களிடத்தும் அந்தர்யாமியாய் நின்று அவற்றை வளர்ப்பவன். இக் கருத்தையே பார்க்கின்ற மலர் ஊடு நீயே இருத்தி என்றார் தாயுமானவரும். ஏட்டுக் கல்வியால் அறியப்படாதவன் இறைவன். நூலுணர்வு உணரா நுண்ணியோன் என்ற தொடரில் நூல் உணர்வு என்று அடிகளார் கூறினாரேனும் நூலால் பெறும் அறிவையே குறிக்கின்றார். நூலறிவு, பட்டறிவு என்ற இரண்டும் பொருளை விளக்கப் பயன்படும் என்றாலும் இறைப் பொருளை உணர்வதற்குப் பயன்படா. இந்த அறிவு எவ்வளவு கூர்மையாகப்