பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 திருவாசகம் - சில சிந்தனைகள் பணிபுரிந்தாலும் அதனுடைய வீச்சினுள் அகப்படாதவன் இறைவன் என்பதைக் குறிக்கவே நுண்ணியோன் காண்க என்றார். நூலறிவு மிக்க சிவகோசரியாருக்குப் பல நாள் பூசனை புரிந்தும் காளத்திநாதன் கிட்டவில்லை என்ற எடுத்துக்காட்டை இங்குச் சிந்திக்கலாம். மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க பந்தமும் விடும் படைப்போன் காண்க நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க கற்பமும் இறுதியுங் கண்டோன் காண்க (50–54) உயர்வு தாழ்வு என்று சொல்லப்படும் அனைத்தும் அவனே ஆவான்; தோற்றம் முடிவில்லாதவனும் அவனே ஆவான். ‘அகன்றோன்' என்றமையின் தோற்றம் என்பதற்கும் முடிவு என்பதற்கும் உள்ள எல்லையைக் கடந்து அப்பாலுள்ளவன் என்ற பொருளையும் வரவைத்தார். பந்தமாகிய பிறப்பையும், விடுதலை என்ற வீடுபேற்றையும் தருபவன் அவனே ஆவான். பந்தத்திலும் மாறுபட்டு நிற்பது வீடு என்றாலும் இவை இரண்டையும் தருபவன் அவனே என்றார். இதன் மூலம் முரண்பட்ட வற்றையும் படைக்கின்றவன் அவனே என்கிறார். நிலையியல் பொருள்கள், இயங்கியல் பொருள்கள் ஆகிய அனைத்துமாகி இருப்பவன் அவனே என்பது ஒருபொருள். இறைவன் ஆற்றல் வடிவானவன் என்பது நன்கு அறியப்பட்டதாயினும் ஆற்றலை இருவகையாகக் காண்பர் விஞ்ஞான நூலார். உள்ளடங்காற்றல் (Potential Energy) என்றும், இயங்காற்றல் (Kinetic Energy) என்றும் அதனைக் கூறுவர். இதனையே சிவம் என்றும் சக்தி என்றும் நம்மவர் கூறினர். தொழிற்படாமையின் பரசிவத்தை உள்ளடங்கு ஆற்றல் என்றும் வெளிப்பட்டுப் பணிபுரியும் இயல்பைச் சக்தி என்றும் கூறுவரேனும் இவை இரண்டும் ஒருவனே என்ற கருத்தை நிற்பதும் செல்வதும் ஆனோன்’ என்று