பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 185 கூறுவது மற்றொரு பொருளாகும். பல்வேறு ஊழிகளைத் தோற்றுவிப்பவன் அவனே ஆதலின் அவ்வூழிகளுள் தானழியாது அவை வந்து போவதைக் கண்டோன்' என்றார். யாவரும் பெறஉறும் ஈசன் காண்க தேவரும் அறியாச் சிவனே காண்க பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க கண்ணால் யானும் கண்டேன் காண்க (55–58) எல்லா உயிர்களும் இறுதியில் வந்துசேர்வதற்குரிய ஈசனாவான் இவன் என்க. அனைத்திற்கும் மூலப்பொருள் ஆதலால் இவனைப் பெண், ஆண், அலியென்று பால் பகுத்து அறியமுடியாது என்க. தேவரும் அறிய முடியாதவனான அத்தகைய ஒருவனை நான்கூட இவ்வூனக் கண்களால் கண்டேன் என்பதையும் அறிக. அருள் நனிகரக்கும் அமுதே காண்க கருணையின் பெருமை கண்டேன் காண்க புவனியில் சேவடி தீண்டினன் காண்க சிவன்என யானுந் தேறினன் காண்க அவன்.எனை ஆட்கொண்டு அருளினன் காண்க. - (59–63) உயிர்கள் இறைவன்மாட்டுச் செலுத்துவது அன்பு எனப்படும். ஆனால் இறைவன் உயிர்க்ள்மாட்டுச் செலுத்துவதை அருள் என்பர் பெரியோர். அருள், கருணை என்ற இரண்டும் காரண காரியம். கருதாது, பெறுவோர்களுடைய தகுதி பாராது வழங்கப்படுவதாகும். அந்த அருளையும்கூட, வேண்டும்போது ஒரோவழி ஒரு சிறிது நல்குவதற்குப் பதிலாக வாரி வழங்குகின்றான் என்ற பொருளில் நனிசுரக்கின்றான்' என்கிறார் அடிகளார். அந்த அருள்தானும் அனுபவிக்கும் பொழுது பெரும் சுவையைத்தந்து பின்னரும் பெரும்பயன் விளைத்தலின் 'அமுது என்றார். - -