பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 திருவாசகம் - சில சிந்தனைகள் திருப்பெருந்துறையில் குருவடிவில் எழுந்தருளியுள்ள பெருமானைக் கண்டவுடன் என்ன நிகழ்ந்தது என்பதை அடிகளார் இரண்டு அடிகளில் பேசுகிறார்(61-62), குருவாக இருந்தவர் தட்சிணாமூர்த்தி வடிவில் ஒரு காலைமடக்கி ஒரு காலைப் பூமியில் ஊன்றி அமர்ந்து இருந்தார் என்கிறார் அடிகளார். சேவடி என்று ஒருமையாகப் பேசுதலின் ஒரு காலை மடக்கி இருந்தார் என்று பொருள் கொள்வதில் தவறில்லை. அவ் வடிவத்தைக் கண்டவுடன் சிவனே இங்ங்ணம் அமர்ந்து உள்ளான் என்று அடிகளார் மனத்தில் உறுதியான எண்ணம் தோன்றிற்று. இதுவரை, தாம் கண்டறியாத ஒருவர் ஒரே விநாடியில் அமைச்சர்க் கோலத்திலிருந்து அடியார் கோலத்திற்கு தம்மை மாற்றி ஆட்கொண்டார் என்று கூறுகிறார் அடிகளார். இப்படி ஆட்கொள்வதற்குத் தம்பால் என்ன தகுதி இருந்தது என்று சிந்தித்த அடிகளார் ஒரு முடிவிற்கு வருகின்றார். தம்பால் எத் தகுதியும் இல்லை, இருந்தாலும் அவன் ஆட்கொண்டதற்கு ஒரே காரணம் அவனுடைய கருணைதான் என்ற எண்ணம் தோன்றவே "கருணையின் பெருமை கண்டேன் காண்க என்ற தொடரை ஆட்கொண்டருளினன்' என்பதற்கு இரண்டடி முன்னரே சொல்லிவிட்டார். சைவசமய குரவர் நால்வர். அவர்களுள் தலைமகன் ஆகிநின்ற தமிழ்ஞான சம்பந்தர் தனியே வைத்து எண்ணப்பட வேண்டியவர். எஞ்சியுள்ள மூவருள் நம்பியாரூரர் வேதியனாக வந்து வழக்குரைத்த இறைவனை அடயாளம் கண்டுகொள்ளவில்லை. சித்தவட மடத்தில இறைவன் பன்முறை திருவடி தீட்சை செய்தும் அவனை இனங்கண்டுகொள்ளவில்லை. அடுத்து நாவுக்கரசரும் திருப்பைஞ்ஞ்லியில் தண்ணிர்ப் பந்தல் வைத்துக் கட்டமுது வழங்கியவரைத் தெரிந்து கொள்ள