பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 187 வில்லை. வாய்மூருக்கு வா என்று வழிகாட்டியபோதும் அவரைத் தெரிந்து கொள்ளவில்லை. அன்றியும் திரு வோட்டை வைத்துவிட்டு, திரும்பக் கேட்டவர் யாரென்று கடைசிவரை திருநீலகண்டர் தெரிந்து கொள்ளவில்லை. இவ்வாறு கூறுவதால் அப் பெருமக்களிடம் ஏதோ குறை இருந்ததென்று ஒரு விநாடியும் கருதிவிடக்கூடாது. ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்று சிந்தித்தல் நலம். இவர்கள் மூவரும் தொடக்கத்திலேயே எதிரே உள்ளவரை யார் என்று தெரிந்துகொண்டிருந்தால் அவர்கள் வரலாறே மாறியிருக்கும். அதனாற்றான் இறைவன் அவர்களை அறிந்துகொள்ளச் செய்யவில்லை. ஆனால், திருவாவூரரைப் பொறுத்தமட்டில் நிலைமை வேறு. தொடக்கத்திலேயே அவர் எதிரேயுள்ள குரு நாதரைச் சிவனெனத் தேறியிராவிட்டால் அவருடைய அமைச்சு வாழ்க்கை நீண்டிருக்கும்; உலகத்திற்கு திருவாசகம் கிடைத்திராது. எனவே அப்பர், சுந்தரர், நீலகண்டர் முதலியோர்க்குத் தன்னை இன்னானென்று அறிந்துகொள்ளும் வாய்ப்பைத்தராத பெருமான் திருவாத வூரரைப் பொறுத்தமட்டில் உடனே அந்த வாய்ப்பைத் தந்துவிட்டான். அடுத்து, ‘சிவன் என யானும் தேறினன் காண்க என்ற தொடர் அடிகளாரின் வரலாற்றில் ஒரு திருப்பு மையமாக அமைந்துள்ளது. பெரும் கல்வியாளரும் அமைச்சருமாக இருக்கின்ற ஒருவர் தம்மைப்பற்றிய ஒரு உயர்வான கருத்துக் கொண்டிருத்தலில் தவறு ஒன்றும் இல்லை. இந்தத் தற்போதம் அறவே ஒழியவேண்டிய காலம் வந்துவிட்டது. அது முற்றிலும் ஒழிந்தாலன்றித் திருவாசகம் தோன்ற வழியில்லை. சுடர்விட்டெரியும் விளக்கு அணையப்போகின்ற நேரத்தில் திடீரென்று அதிகப் பிரகாசத்துடன் எரிந்துவிட்டு அணைவதுபோல அடிகளாரின் தற்போதம் இறுதியாகப் பயன்பட்ட இடம்