பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 திருவாசகம் - சில சிந்தனைகள் இதுவாகும். கருணையின் பெருமையைக் கண்டேன் என்றும், ஆட் கொண்டருளினன் என்றும் கூறுகின்ற அடிகளார், இவ்விரண்டிற்கும் இடையே சிவனென யானும் தேறினன்' என்று கூறுவது சற்றுப் புதுமையாக உள்ளது. தம்முடைய ஆராய்ச்சியின் முடிபு’ என்று கூறுவதுபோல யானும் தேறினன்' என்ற சொற்கள் அமைந்துள்ளன. 'அவனருளாலே அவன்தாள் வணங்கி என்றும் தானே வந்தெனது உள்ளம் புகுந்தருளி அடியேற்கு அருள் செய்தான் என்றும் பேசுகின்ற ஒருவர், இந்த் இடத்தில் “யானும் சிவனென தேறினன்' என்று பேசுவது சரியா? என்ற வினாவை எழுப்பிக்கொண்டு சிந்திப்பதில் தவறு இல்லை. ஒரே தன்மையுடைய பலவற்றினிடையே ஒன்றை ஒருவர் தேர்ந்தெடுக்கும் போதுதான் “தேறினன்' என்ற சொல் பொருத்தமுடையதாகும். அப்படியானால் அடிகளார் இந்த முடிபுக்கு வருவதற்கு காரணம் யாது? புவனியில் சேவடி தீண்டிய ஒருவனை ஒரு மனிதன் என்றும், துறவியென்றும், சீடர்களின் தலைவன் என்றும் முடிவு செய்வதை விட்டுவிட்டுச் சிவன் என்ற முடிவுக்கு வந்தது தேறினன் என்ற சொல்லின் உண்மைப் பொருளாகும். எதிரேயுள்ள குருவின் கூர்மையான பார்வை தம்மேல் பட்டவுடன் அமைச்சர், எல்லாவற்றையும் இழந்து அடியாராக மாறப் போகிறார். குருவினுடைய பார்வை படுவதற்கு முன்னும் அமைச்சர் குதிரையிலிருந்து குருவை நோக்கி வருவதற்கும் இடைப்பட்ட ஒருசில விநாடிகளில் நிகழ்ந்ததைத்தான் “யானும் தேறினன்' என்ற தொடர் அறிவுறுத்துகிறது. குருவின் பார்வை பட்டவுடன் அமைச்சரின் 'யான்' அழியப்போகிறது. பார்வை படுவதற்கு சிலவிநாடிகளின் முன்னர்த் தோன்றிய சொற்கள் இவை. இங்கு இறுதியாக “யானும் தேறினன்' என்பதிலுள்ள 'யான் அணையப்போகும் விளக்கு