பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தன்ைகள் • 189 சுடர்விட்டெரிகின்ற தன்மைக்கு ஒப்பான தற்போதம் ஆகும். அப்படியானால் திருவாசகத்தில் யான் என்றசொல் பலவிடங்களில் வந்துள்ளதே என்ற ஐயம் நியாயமானதே ஆகும். நானேயோ தவம் செய்தேன்’ (திருவாச. 38 -10, நானார் என் உள்ளமார்’ (திருவாச :10–2) என்பனபோன்ற இடங்களில் வரும் யானுக்கும், யான் தேறினன் என்ற இடத்தில்வரும் யானுக்கும் உள்ள வேற்றுமை கடல் போன்றதாகும். யானும் தேறினன் என்பதிலுள்ள 'யான் தற்போதத்தில் விளைந்ததாகும். பின்னர்க் காட்டப்பட்டுள்ள யான் சுட்டுப்பொருளளவில் நின்றது. இதனை மனத்தில் கொண்டுதான்போலும் அடிகளார் 'நான் கெட்ட வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ? (திருவாச : 1-18) என்று பின்னர்ப் பாடியுள்ளார். குவளைக் கண்ணி கூறன் காண்க அவளும் தானும் உடனே காண்க : (64–65) திருப்பெருந்துறையில் அடிகளார் கண்டது துறவிக் கோலத்திலிருந்த ஒரு குருவைத்தான். ஆனால் அவர் அருள் பெற்றுவிட்ட காரணத்தால் இத்துறவுக் கோலத்துள்மறைந்து இருக்கின்ற இறைவன் வடிவை அவரால் காண முடிகிறது. இல்லாவிட்டால் ஒரு துறவியைப் பார்த்து 'குவளைக் கண்ணி கூறன்’ என்று சொல்வது பொருத்த மற்றதாகிவிடும். அருள்வடிவான அன்னையும் அத்தனும் பிரியாமல் இருக்கின்ற நில்ையை இந்த இரண்டு அடிகளில் கூறியுள்ளார். பரமஆனந்தப் பழங்கடல் அதுவே கரு ಕ್ಡ - * Hs Vali ; 5Ա)Ո] ճ) 6ն)Iյնil6Ա 6T ಘೀ ಕ್ಲಿ 'ಘೀ 驚 - ஐம்புலப் பந்தனை வாள்.அரவு இரிய வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப