பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 திருவாசகம் - சில சிந்தனைகள் நீடுஎழில் தோன்றி வாள்.ஒளி மிளிர எந்தம் பிறவியில் கோபம் மிகுத்து 够 * * முரசு எறிந்து மாப்பெரும் கருணையின் முழங்கிப் பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச் செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட, வரை உறக் கேதக் குட்டம் கையற ஓங்கி இருமுச் சமயத்து ஒருபேய்த் தேரினை நீர்ந்சை தரவரு நெடுங்கண் மான்கணம் தவ்ப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன ஆயிடை வ்ரண்ப் பேரியாற்று அகவயின் _ பாய்ந்துஎழுந்து இன்பப் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்து எம்பந்தம் மாக்கரைபொருது அலைத்து இடித்து ஊழுழ் ஓங்கிய நங்கள் இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து உருவ அருள்நீர் ஒட்டா அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டு.அவிழ் வெறிமலர்க் குளவாய் கோலி நிறைஅகில் மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள மேன்மேல் மகிழ்தலின் நோக்கி அருச்சனை வயலுள் அன்பு வித்திட்டுத் தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத்து அரும்ப்ெறல் மேகன் வாழ்க. (66-95) இந்த அரியபாடலில் 66ஆம் அடிமுதல் 95ஆம் அடிமுடிய உள்ள பகுதி முற்று உருவகம் என்று சொல்லப்படும். சாதாரண உலக இன்பங்களைப்போல் அல்லாமல் இறைவனது அருள் என்னும் பேரானந்தப் பெருங்கடலே நீருண்ட மேகமாகி, ஞானாசிரிய வடிவமெடுத்துத் திருப்பெருந்துறை என்னும் மலையில் தங்கிற்று. மேகம் இடி இடிப்பதுபோன்ற பெருங்குரலால் எம்மை வருக என்று அழைத்தது. மேகம் மழைத்துளியைப் பெய்வது போல இந்த ஞானாசிரியன் ஆகிய மேகம், பல்வேறு