பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம் 11 திருவாசகம், பாடுவதாகிய செயல் ஆகிய மூன்றும், ஒன்றாக எப்போது ஆகிறதோ அப்போதுதான் அந்த அனுபவத்தைப் பெற முடியும். இந்தக் கருத்தைத்தான் வள்ளற்பெருமான், - வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் (திருஅருட்பா :5-12-7) என்று கூறினார். அந்த நான் திருவாசகத்தில் கரைந்து விட்டால் அது வெறும் பாடல்களாக இல்லாமல், ................நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து,பால்கலந்து,செழுங்கனித் தீஞ்சுவைகலந்து ஊன் கலந்து, உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே (திருஅருட்பா :5-12-7) என்று வள்ளலார் கூறுவது எவ்வளவு உண்மை என்பது தெரியவரும். திருவாசகத்தின் பொருள் என்னவென்று யாரோ ஒருவர் வாதவூரரைக் கேட்டதாகவும், அதன் பொருள் இவன்தான்' என்று தில்லைக் கூத்தனைக் காட்டிவிட்டுச் சோதியில் மறைந்ததாகவும் பரம்பரைக் கதை கூறும். ஆகவே, திருவாசகம் உணர்வில் என்ன மாற்றத்தைச் செய்கிறது என்பதைத் திருவாசகத்தில் ஈடுபட்டு அவரவர் அறிந்துகொள்ள வேண்டும். இறைவனைத் துணைக் கொண்டு, இன்றுவரை, மனித சமுதாயம் பெற்றுள்ள அத்தனை வளர்ச்சியையும், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மணிவாசகப் பெருமான் எவ்வாறு பெற்றுள்ளார் என்பதை ஆராய்ந்து எடுத்துக்காட்டவே இந்தச் சிறு நூல் எழுதப்பெற்றுள்ளது. - இறையருள் கிடைத்துவிட்டால் அறிவின் துணைக் கொண்டு பெறவேண்டியது அனைத்தும் தாமேவ்ந்துவிடும்