பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 திருவாசகம் - சில சிந்தனைகள் தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கையில் எங்கோ நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை இத்துணை பெரிய உருவகமாக்கி எக்காலத்திற்கும் ஒத்துவரும்படி Lisrt}_{L/ பெருமை திருவாதவூரற்கே உரியதாகும். கரும்பணத் கச்சைக் கடவுள் வாழ்க அருந்தவர்க்கு அருளும் ஆதி வாழ்க அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க - நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க சூழ்இருந் துன்பந் துடைப்போன் வாழ்க எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க பேர்அமைத் தோளி காதலன் வாழ்க ஏதிலர்க்கு ஏதில்எம் இறைவன் வாழ்க காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க. (96–105) பாம்பை இடையில் சுற்றியவனும், நற்றவம் செய் வோர்க்கு அருள் சுரப்பவனும், உயிர்களின் அச்சத்தைப் ப்ோக்குபவனும், எல்லாக் காலத்தும் உயிர்களைத் தன்பால் ஈர்த்து ஆட்கொள்பவனும், பிறப்பெடுத்த உயிர்கள் அனைத்தையும் சூழ்ந்திருக்கும் துன்பங்களைத் துடைப்பவனும், தன்னை நத்தி ஆட்படுபவர்களுக்கு அமிழ்தத்தைத் தருபவனும், நள்ளிருளில் நட்டம் பயில்பவனும், உமாதேவியின் காதலனும், அந்நியர்க்கு அந்நியமாய் இருப்பவனும், தன்பால் விரும்பி அன்பு செய்வார்க்கு சேமநிதியாக உள்ளவனும் ஆகிய பெருமான் வாழ்க. துணையாக நிற்பவன் ஒருவீரனாக இருந்தக்கால் நலம்பயக்கும் என்ற கருத்தைச் “சேவகன்” என்ற சொல்லால் விளக்கினார். துன்பத்தைப் போக்குதல் வேறு, துடைத்தல் வேறு. அறுதியாக, மீண்டும் துன்பம் தோன்றாமல் இருக்குமாறு செய்வதைத் துடைத்தல்”