பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 193 என்ற சொல்லால் விளக்கினார். பின்னரும் தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி (திருவாச : 4-13) என்று பாடியுள்ளார். ‘ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன் வாழ்க’ என்னும் தொடர் சிந்திக்கற்பாலது. ஏதிலர் என்பது தன்னை நாடாமல் ஒதுங்கி நிற்பவரைக் குறிக்கும். வினை கெடுத்துப் பிறப்பு அறுத்தலைத் தன்னை நாடி வந்தோர்க்குச் செய்யும் இறைவன், தன்னை நொதுமலனாகக் கருதி நாடாமல் ஒதுங்கி நிற்போர்க்குத் தானும் நொதுமலனாக இருக்கின்றான். இறைவனைப் பொறுத்தமட்டில் அவன் மாட்டு அன்புகொள்ளாமல் ஏதிலராக வாழ்கின்றவர்களுக்கும் அவர்கள் வாழ்க்கைக்கு வேண்டியவற்றை ஜீவனாம்சம்போல இறைவன் தருகிறான். தம்மைப் பற்றிதிற்கும் வினைத்தொடர்பை அறுத்து எவ்வாற்றானும் வீடுபேற்றை அடையவேண்டும் என்று நினைக்கின்றவர்கள், இறைவன் திருவடிகளைச் சரணம் அடைதல்தவிர வேறு வழியே இல்லை என்பது இவற்றிலிருந்து பெறப்பட்டது. நச்சுஅரவு ஆட்டிய நம்பன் போற்றி பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி, நால்திசை நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய் நிற்பன நிறீஇச் சொல்பதங் கடந்த தொல்லோன் (106-111) பாம்பை அணிந்திருப்பதுடன் கையில் வைத்து ஆட்டுபவனே வணக்கம். சராசரி மனிதரைப்போல் அல்லாமல் அமைச்சுத் தொழில் பூண்டிருந்த என்னை ஒரே விநாடியில் நின்பால் பேரன்பு கொண்டு அனைத்தையும் துறந்த பித்தனாக ஆக்கியவனே போற்றி இக்கருத்தைப் பின்னரும் பிச்சன் ஆக்கினாய் பெரிய