பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 திருவாசகம் - சில சிந்தனைகள் அன்பருக்கு உரியன் ஆக்கினாய்'(திருவாச :5-96) என்றும்; பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி'(திருவாச : 8-2 என்றும்; பித்தென்னை ஏற்றும்(திருவாச : 47-) என்றும்; பித்தன் என்றெனை உலகவர் பகர்வதோர் காரணம்'(திருவாச : 26-4) என்றும் பாடியுள்ளமை அறியற்பாலதாம். இறையன்பு முதிர்ந்த நிலையில் வேறு எதிலும் நாட்டமில்லாமல் எந்நேரமும் அந்த அனுபவத்தில் திளைத்திருத்தலின் உலகவர் இலர் அவர்களைக் கடவுட் பித்து ஏறியவர் என்று கூறினர். அறிவிற்குறைந்த சிலர் இவர்களைப் பைத்தியம் என்று பழித்துரைத்தனர். அடிகளார் காதுபட இவ்வாறு பலர் பேசியதைப் பித்தன் என்றெனை உலகவர் பகர்வதோர் காரணம் இதுகேளிர் (திருவாச : 26-4) என்றும்; நாடவர் நம்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப'(திருவாச 9-1) என்றும் பாடியுள்ளமை காணலாம். திருநீற்றுக் கோலத்துடன் குருவாக எழுந்தருள வல்லவனே போற்றி. இப்பிரபஞ்சத்தினிடை இயங்கியல் பொருட்களைப் படைத்து உலவுமாறு செய்தும், நிலையியல் பொருட்களைப் படைத்து அவை உயிருடன் இருப்பினும் இயங்காமல் ஒரே இடத்தில் நிலைபெறுமாறு வைத்தும், உயிரற்ற சடப்பொருள்களாகிய மண், கல் முதலியவற்றைப் படைத்தும் வருபவன் சிவனே என்க. இவன் சொல் ஆகவும், பொருளாகவும் இருப்பினும் அச்சொல், அதனால் குறிக்கப்படும் பொருள் என்ற இரண்டையும் கடந்த பழமையானவனாகவும் உள்ளான் என்க. உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன் கண்முதல் புலனால் காட்சியும் இல்லோன் விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன். (112–114) மனிதனுக்கு அறிவு, உணர்வு என்ற இரண்டு பெரும் துணைகள் உண்டு. அறிவு என்பது மூளையின்பாற்