பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 195 பட்டது. உணர்வு என்பது உள்ளத்தின்பாற்பட்டது. பொருளின் தன்மைகளை ஆராய்ந்து அதன் இயல்பைக் கண்டறிவது அறிவின் செயலாகும். ஆனால் பொருளின் இயல்பை ஆராய முற்படாமல் அப்பொருளின்கண் ஈடுபட்டு உணர்வினால் ஒன்றி அதனைத் தன்னுட் படுத்திக் கொள்வது உள்ளத்தின் செயலாகும். பொருளுக்குப் புறத்தே நின்று தொழிற்படுவது அறிவு. இவ் அறிவு ஆராய்ச்சியில் நான் ஆய்கின்றேன்’ என்பது அடிப்படையில் நின்றே தீரும். இதன் மறுதலையாக உணர்ச்சிப் பெருக்கில் நான் என்பது அழிந்தே விடுகிறது. இதுகருதியே நம் முன்னோர் இறை அறிவு என்று கூறாமல் இறை உணர்வு’ என்றே கூறினர். அறிவாய்விற்கு அப்பாற்பட்டவன் இறைவனென்டது நம்முன்னோர் துணியாகும். இக்கருத்தை ஓரளவு ஏற்றுக்கொண்ட அடிகளார், உணர்வினாற்கூட இறைவனை முழுவதுமாக உள்ளத்துள் கொண்டுவர முடியாது என்ற கருத்தை உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன் என்று கூறியுள்ளார். தமிழ் மொழியில் உணர்வு, உணர்ச்சி என்ற இரண்டு சொற்கள் உள்ளன. பசி, தாகம், சினம் முதலியவை உணர்ச்சிகள் என்றே சொல்லப்படும். இறைவன்மாட்டுக் கொண்டுள்ள பக்தி, தலைவன் அல்லது தலைவிமாட்டுக் கொண்டுள்ள காதல் என்ற இரண்டும் உணர்வு என்றே சொல்லப்படும். அடிகளார் 'உள்ளத்து உணர்ச்சியில்’ என்று சொல்லும்போது உணர்வைத் தவிர்த்து உணர்ச்சியையே குறிப்பிடுகிறார் என்பதை அறிதல் நலம். உணர்ச்சி மனத்தின் உள்ளும், உணர்வு சித்தத்தின் உள்ளும் தோன்றும் என்க. உள்ளத்தில் (சித்தத்தில்) இறை உணர்வு தோன்றின் பக்கி வலையில் படுவோன்' ஆகிய இறைவன் அவ்வுணர்வுள் அகப்படுதல் ஒருதலை, அடிகளார் உள்ளத்து உணர்ச்சியில்’ என்று கூறினார்