பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 திருவாசகம் - சில சிந்தனைகள் என்றாலும் அவர் உள்ளம் என்ற சொல்லால் குறிப்பது மனத்தையே ஆகும். - இறைவனைப்பற்றிக் கூறும்பொழுது பொறி, புலன்: களுக்கு அப்பாற்பட்டவன் என்று கூறும் மரபு பண்டுதொட்டே இந்நாட்டில் இருந்துவருகிறது. 'கண்முதல் புலனால் என்று அடிகளார் கூறியது ஐம்பொறிகளையும் குறிப்பதேனும் கண்ணைத் தனியே எடுத்து விதந்து கூறியமைக்கு ஒரு காரணம் உண்டு. ஏனைய பொறிகள் நின்று பற்றும் பொறிகளாக இருக்க, கண்மட்டும் சென்று பற்றும் பொறியாகவுள்ளது. கண்ணாகிய பொறிக்குக் காட்சியே குணமாகும். சென்று பற்றும் பொறியாகக் கண்ணிருந்தும் அக்காட்சியில் புலப்படாதவன் இறைவன் என்றார். - பேரூழிக் காலத்தில் திண்மையுடைய மண்ணும் அடுத்தடுத்து மென்மையுடைய நீர், தீ, வளி என்ற நான்கு பூதங்களும் ஆகாயத்திடம் சென்று அடங்கிவிடுகின்றன. மறுபடியும் படைப்புக் காலத்தில் அவ் ஆகாயத்தில் இருந்தே ஏனைய நான்கு பூதங்களும் வெளிப்பட்டுத் தொழிற்படுகின்ற இயல்பை விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்' என்று கூறினார். பூவில் நாற்றம் போன்று உயர்ந்து எங்கும் ஒழிவுஅற நிறைந்து மேவிய பெருமை இன்றுஎனக்கு எளிவந்து அருளி அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் . (115-118) திருப்பெருந்துறையில் குருந்தமரத்தடியில் குருவாய் எழுந்தருளியவர் எத்தசையவர்; அவர் என்ன செய்தார்; என்பவற்றை இந்த நான்கு அடிகளிலும் விளக்குகின்றார். மலர் என்ற ஒன்று ஒரு குறிப்பிட்ட வடிவுடன் எங்கோ ஓரிடத்தில் மலர்ந்திருந்தாலும் அதனுடைய மணம் நெடுந்