பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 197 தூரத்திற்கு அப்பாலும் வீசிக்கொண்டிருக்கும். இந்த நாற்றம் மலரின் எப்பகுதியிலிருந்து வெளிப்படுகின்றது என்று சொல்ல முடியாது. அந்த மணம் தூரத்தே நிற்பவர்களையும் தன்பால் ஈர்க்கச் செய்வதுபோல, குருந்த மரநிழலில் இருந்த குருவினிடமிருந்து வெளிப்பட்ட அலைகள் குதிரையின்மேல் வந்த ஓர் அமைச்சரை இழுத்துக்கொண்டது. மனத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் மலரிடம் செல்வதுபோல அமைச்சர் குருவிடம் வந்தார். இந்த அளவில் இந்த உவமை நின்றுவிட, மலர் செய்ய முடியாத ஒரு செயலைக் குரு செய்கிறார் என்கிறார் அடிகளார். மலரின் மணம் வழிப்போக்கனுக்கு எளிதாகக் கிடைப்பதுபோல குருவின் அருள் அலைகள் தமக்கு எளிதாக்க் கிடைத்தது என்கிறார். மணத்தைப் பரப்பும் மலர்போல் அருளைப் பரப்பும் குருவானவர் தம்பால் 'வந்த அமைச்சரின் மானிட யாக்கைக்கு இயல்பாக உள்ள குற்றங்களை ஒரே விநாடியில் போக்கினார் என்கிறார். 'ஒழியச் செய்த ஒண்பொருள் என்று அஃறிணை வாய்பாட்டில் கூறியமையின், அடிகளார் குருவைப்பற்றி இங்கே பேசவில்லை; அவரிடமிருந்து புறப்பட்ட அருள் அலைகளையே ஒண் பொருள் என்று குறிப்பிடுகின்றார். அந்த ஒண் பொருளின் அருகே சென்றவுடன் அடிகளாரின் யாக்கை மாசுகள் அறவே நீங்கின என்கிறார். யாக்கை ஒழியச்செய்த என்று அடிகளார் கூறியமையின், அதற்கு முன்னர் பசு கரணங்களோடு கூடியிருந்த யாக்கை ஒழிந்து இப்பொழுது பதி கரணங்களுடன் கூடிய யாக்கையாக மாற்றப்பட்டது என்றலுமாம். இன்றுஎனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி ஊற்றுஇருந்து உள்ளம் களிப்போன் போற்றி - - (119–12)