பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 திருவாசகம் - சில சிந்தனைகள் மலரின் மணம் குறிப்பிட்ட ஒரு எல்லை அளவே பரவி நிற்கும். ஆனால் இக் குருவின் அருளலைகள் எங்கும் ஒழிவற நிறைந்துள்ளது என்கிறார். இவ் அருள் அலைகளைத் தாங்கிய அந்தக் குருநாதர் ஈடிணையற்றவர் என்றாலும், உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் என்றாலும் இன்று என் கண்ணெதிரே எளிதாக வந்துதோன்றி அருள் செய்தார் என்கிறார். அவருடைய அருள் அலைகள் எங்கும் வியாபித்துள்ளன என்பதை ஒழிவுஅற நிறைந்த ஒருவ போற்றி திருவாச : 4-21) என்றும் கூறியுள்ளார். குருநாதரைக் கண்டவுடன் உள்ளம் மட்டுமன்றி உடல் முழுவதும் உருகிற்று என்று கூறுகிறார். உடலும் உருகிய சிறப்பை திருவாசகம் முழுவதிலும் பலப்பல இடங்களில் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். இந்த உடம்பை என்புதோல் போர்த்த உடம்பாக அல்லாமல் அன்பே வடிவாகச் செய்துவிட்டார். அதனாற்றான் உடம்பு முழுவதிலும் இந் நெகிழ்ச்சி தோன்றிற்று என்று தம் அனுபவத்தை எடுத்து விளக்குகின்றார். உள்ளத்தினுள்ளே தங்கியிருக்கும் குரு, இறையனுபவத் தால் ஏற்படும் உள்ளக்களிப்பை(ஆனந்த அனுபவம்) அருளுகின்றவர் என்கிறார். ஆற்றா இன்பம் அலர்ந்துஅலை செய்யப் போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம் மின்ஒளி கொண்ட பொன்ஒளி திகழத் திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும் (122–126) திருப்பெருந்துறையில் ஞானாசிரியரின் திருவருளைப் பெற்றபின்னர் கிடைத்த இன்பத்தை ஆற்றா இன்பம் என்றார். அதாவது தாம் ஏற்றுக் கொள்ளுகின்ற அளவிற்கு, மேற்பட்டு அலை அலையாய் விரியும் இன்ப வாரிதி