பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 199 என்றார். போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்' என்பது மிகவும் ஆழ்ந்து சிந்தித்துப் பொருள்கொள்ள வேண்டிய பகுதியாகும். போற்றா ஆக்கை என்பது 'அந்த இன்பத்தைத் தாங்கமுடியாத உடம்பு’ என்பதாகும். யோக நெறியில் செல்பவர்களுக்கு இத்தகைய சூழ்நிலை ஏற்படுவதுண்டு. இதனாலேயே குருவாக இருப்பவர் சீடனின் மன, உடல் பக்குவம் கண்டு அடுத்த படியைப் போதிப்பார். பல சமயங்களில் பழைய நல்வினை காரணமாக மனப் பக்குவம் ஏற்பட்டுவிட்டாலும் உடல் பக்குவம் அதற்கு இணையாக அமைவதில்லை. மானிட குருமார்கள் சீடனின் உடற்பக்குவத்திற்கு ஏற்ப அடுத்த படியைக் காட்டுவர். ஆனால் இங்கு குருவாக வந்தவர் இறைவனே ஆதலின் ஒரே விநாடியில் அமைச்சரை அடியாராக மாற்றியதோடு அல்லாமல் ஆற்றா இன்பத்தை அருளினார். இப்பொழுது அடிகளாரின் மானிட உடல் இதனைத் தாங்காமல் ஒடிந்திருக்க வேண்டும். அருளியவர் இறைவன் ஆதலால் உடம்பு ஒடியவில்லை. ஆனலும் உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிலும் பலமடங்குக்கும் மேற்பட்டு அந்த ஆனந்தம் கிடைத்தமையின் இவ்வுடம்பு எவ்வாறு அதனை ஏற்றுத் தாங்கி நிற்கின்றதென்பதை என்னால் சொல்ல முடியவில்லை என்கிறார் அடிகளார். மரகத மணியும் மாணிக்க மணியும் இரண்டு குவியல்களாக ஒன்றுக்கொன்று அணித்தே இருப்பதுபோல பசுமை நிறமுடைய பிராட்டியும் செவ்வொளி திகழும் பெருமானும் உள்ளனர் என்க. இவர்களிடம் தோன்றிய ஒளி மின்னலைப்போன்று பரந்து விரியவும் நான்கு முகங்களையுடைய திசைமுகன் தேடிச்சென்றானாக, அவனுக்குப் புலப்படாமல் ஒளித்துக் கொண்டான் என்க. -இவ்வடியில் சிவப்பும், பச்சையும் ஆகிய நிறங்களையுடைய சிவசக்தியின் ஒளி எல்லாத் திசைகளிலும் சென்று பரவவும் பிரமன் காணமுடியவில்லை என்றார். பிரமனை