பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 திருவாசகம் - சில சிந்தனைகள் திசைமுகன் என்றிங்கே குறித்தது சிந்திக்கத்தக்கது. ஒரு திசையைமட்டும் காணக்கூடிய முகமுடையவர்கள் ஒளியை ஒருநிலையில் காணமுடியாமல் போய்விடலாம். ஆனால் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களையுடைய ஒருவன் இத்தகைய பேரொளியைக் காணமுடியாமல் போய்விட்டது என்றால் அது அந்த ஒளியை உடையவன் தன்னை ஒளித்துக் கொண்டதனாலேயோ? என்றால், இல்லை என்க. நான்கு முகங்களிலும் எட்டுக் கண்களைப்பெற்ற நான்முகனிடமிருந்து இவ்வொளி எவ்வாறு தன்னை மறைத்துக் கொண்டது என்ற வினா தோன்றுமன்றே? அதற்கு விடை எளிதிற்காணலாம். ஒளி எங்கும் போய்விட வில்லை. ஆனால் அந்த ஒளியைக் காணவேண்டிய கண்களைத் திசைமுகனுடைய அகங்காரம் மறைத்து விட்டது என்க. ஒளித்தலாகிய செயலை இறைவன்மேல் ஏற்றினாரேனும் உண்மையில் அவன் காணப்படாமைக்குக் காரணம் திசைமுகனின் ஆணவமே என்க. தேடினர்க்கு என்று பன்மையாகக் கூறியமையின் திசைமுகனை ஒத்த பிறரையும் கொள்க. முறைஉளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும் ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும் மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் இத்தந்திரத்தில் காண்டும் என்றுஇருந்தோர்க்கு அந்தந்திரத்தின் அவ்வயின் ஒளித்தும் முனிவுஅற நோக்கி நனிவரக் கெளவி ஆண்எனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து வாள்நுதல் பெண்ணென ஒளித்தும். (127–135) ‘முறையுளி என்று கூறியமையின் சரியை, கிரியை ஆகிய மார்க்கங்களைக் கூறினாராயிற்று. இம்மார்க்கங்கள் வழிகாட்டும் கைகாட்டி மரங்களேதவிர அவையே முடிவானவை அல்ல. இக்கிரியைகளைச் செய்பவர்கள்,