பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 * திருவாசகம் - சில சிந்தனைகள் என்பதைச் சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தர் புராணத்தில் அற்புதமாக எடுத்துக் காட்டியுள்ளார். - உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்

  • (பெ.பு. திருஞான-70)

என்று கூறுகிறார். திருவருள் கூடிவிட்டால் உணர்வரிய மெய்ஞ்ஞானம், உவமையிலாக் கலைஞானம் கிட்டும் என்பதற்குத் திருஞானசம்பந்தருக்குப் பிறகு இரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் திருவாதவூரர் சான்றாக உள்ளார். திருவாசகத்திற்கு இதுவரை பல உரைகள் வந்துள்ளன. அவை அனைத்துமே பதவுரை, பொழிப்புரை என்பவை ஆகும். மேலும், சைவ சித்தாந்தச் சட்டகத்துக்குள் திருவாசகப் பாடல்களைப் புகுத்தும் முயற்சியும் நடை பெற்றுள்ளது. எட்டாம் திருமுறை என்று கூறப்பட்ட காரணத்தால் இந்த முயற்சியில் தவறு கூறுதற்கில்லை. இதனிடையே திருவாசகம்-சில சிந்தனைகள்’ என்ற இந்த நூல், ஒரு புதிய வழியில் செல்லும் முயற்சியாகும். ஒரு பாடலைப் படித்தவுடன் அதிலுள்ள சொற்களுக்கு நேரிடையாகப் பொருள் காண்பது ஒருவகை. இதனை ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. (தொல்சொல்-பெயர்- என்ற தொல்காப்பிய இலக்கணத்தை அடியொற்றிச் செல்லும் முறையென்று கூறலாம். இவ்வாறு பொருள் கூறும்போது, பாடலில் காணப்படும் சொற்களுக்கு மரபுபற்றியும் வாலாயமாகப் பொருள் காணும் முறைபற்றியும் பொருள் காண்கிறோம். இப்படி அல்லாமல் மற்றொரு வழியுமுண்டு என்பது பல காலமாகவே நம்மால் மறக்கப்பட்டுவிட்டது. தொல்காப்பியர் காலத்தில் பொருளதிகாரத்தில் ஐந்தாவதாக உள்ள பொருளியலில் வரும் 33, 4 ஆகிய நூற்பாக்கள் செய்யுளுக்குப் பொருள்காணும் முறையில்