பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திரு அண்டப்பகுதி - சிந்தனைகள். 201 முறையுளி ஒற்றி என்று கூறுவதால் மனத்தையுங்கூட முழுவதுமாக இக் கிரியைகளிலேயே ஈடுபடுத்திவிட்டனர் என்க. இவர்கள் திசைகாட்டி மரங்களின் அடியிலேயே அமர்ந்துகொண்டு செல்லவேண்டிய இடத்திற்குச் சென்று விட்டதாக நினைப்பவர்கள். இத்தகையவர்கட்கு இறைவன் தன்னை ஒளித்துக் கொள்கிறான் என்கிறார் அடிகளார். உள்ளத்தில் ஒருமைப்பாட்டுடன்(ஏகாக்ர சித்தத்துடன்) உடம்பை வருத்தி, உறவினர் கண்டு வருந்துமளவிற்கு யோக நெறியில் ஈடுபடுவோர்க்கும் அவன் அகப்படான் என்க. - வேத நெறியில் ஈடுபடுபவர்கள் கர்மகாண்டத்தில் சொல்லப்பட்ட முறையில் யாகங்களைச் செய்தும், உபா சனாகாண்டம் அல்லது ஆரணியகம் என்ற பகுதிகளில் சொல்லப்பட்டபடி பல வழிகளைக் கையாண்டும், ஞான காண்டம் என்று கூறப்படும் உபநிடதங்கள் கூறும் வழி களைப் பின்பற்றியும் பன்னாள் முயன்றாலும் இறைவன் வெளிப்படான் என்கிறார் அடிகளார். அன்றியும் உபநிடதங்கள் பிரமத்திற்கும், ஜீவாத்மாவிற்கும் இடைவெளி இல்லாமல் செய்து நானே பிரமம் (ஸோ அகம் பிரம்மாஸ்மி, தத்வமஸி என்ற முறையில் அழைத்துச் செல்கின்றன. ஆதலால் இம்முறையில் செல்பவர்க்கு இறைவன் ஒளித்துக் கொள்கிறான் என்கிறார். தந்திரம் என்று கூறப்பெறும் ஆகம சாத்திர அடிப்படையில் இறைவனைக் காணமுடியும் என்று நினைப்பவர்க்கு அந்த ஆகமங்களிலேயே தன்னை ஒளித்துக் கொள்கிறான் என்கிறார். ஆகமங்கள் திருக் கோயில் கட்டும்முறை, ஆராதனை முறை என்பவற்றைக் கூறுவன ஆதலின் இவ்வழிச் செல்வோர்களும் திசைகாட்டி மரத்தின் அடியில் அமர்பவர்களே ஆவர். காரணம் இறையன்புப் பெருக்கின் காரணமாகத் திருக்கோயிலின்