பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 திருவாசகம் - சில சிந்தனைகள் உள்ளேயுள்ள படிமங்களை இறைவனாகவே நினைப்பது வேறு இறைவனின் அடையாளம் என்று நினைப்பது வேறு. குடுமித்தேவரை(காளத்திநாதரை) ஆகமம் படிக்காத திண்ணனார் கற்சிலையாகவோ, சிவலிங்கமாகவோ காணவோ, கருதவோ இல்லை. தன் முழு அன்பிற்கும் பாத்திரமான ஒரு பொருளாகவே கருதுகிறார். ஆனால் ஆகம வல்லுனராகிய சிவகோசரியார் சிவலிங்கத் திருமேனியை இறைவனின் அடையாளம் என்று கருதுகிறாரே தவிர, திண்ணனாரைப்போலக் கருதவில்லை. சிகோசரியாருக்கும் அன்பு இருந்ததேனும் அது ஆகம வழிச் செல்லும் அன்பாகும். இறைவனே கனவில் கூறியும் ஆகமவழி நிற்கும் சிவகோசரியார், திண்ணனார் செய்தது தவறு என்று கருதினாரேதவிர அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகம ரீதியில் கோயில்கட்டி குடமுழுக்கிற்கு நாள்குறித்த பல்லவமன்னனின் கோயிலில் புகாமல், பூசலார் அன்பால்கட்டிய மனக்கோயிலில் குடிபுக முனைந்தான் இறைவன் என்பதும் இதையே காட்டுகிறது. இந்த அடிகளுக்கு உரைகறுவோர் சைவ ஆகமங்கள் தவிர ஏனைய பாஞ்சராத்திரம், வைகானசம், யாமளம், வாமம் முதலிய ஆகமங்களை எடுத்துக் கூறுவர். இவ்வழிச் செல்வோர் ஆண் வடிவினன் என்றும், பெண்வடிவினள் என்றும் கருதிக் காண்பதே அன்றி அவர்களும் இறைவனை அறியமாட்டார்கள். இவ்வாறு ஆகமங்களைச் հԾ):-6չ} ஆகமங்கள், ஏனைய ஆகமங்கள் என்று பிரிவினை செய்து உரை வகுப்பது சைவர்களுக்கு மகிழ்ச்சி தரலாம்; ஆனால் மணிவாசகரின் கருத்துடன் இது இசையுமா என்பது சிந்திக்கற்பாலது. 'முனிவுஅற நோக்கி’ என்று தொடங்கி பெண்ணென ஒளித்தும்’ என்றவரையிலுள்ள தொடர்களுக்குச் சரியான பொருள் விளங்கவில்லை. ஒரளவு உத்தேசமான பொருளைக் கீழே தந்துள்ளேன்.