பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் • 203 ஒன்றுக்கொன்று பெரிதும் மாறுபாடுடைய வேத வழிப்பட்ட வழிபாட்டு முறையையும், ஆகம வழிப்பட்ட வழிபாட்டு முறையையும் அடுத்தடுத்துக் கூறுகிறார் அடிகளார். வேதவழி வழிபாட்டில் திருக்கோயிலோ, கடவுட் படிமங்களோ, அபிடேக ஆராதனைகளோ எதுவும் இல்லை. இருப்பத்தொருவகை யாகங்கள் பேசப் பட்டன என்றாலும் அவை அனைத்தும் அக்கினியில் ஆகுதி சொரிதலையே பேசும். உபநிடதங்களுக்கு வரும்பொழுது அவை அனைத்தும் அறிவுவழி நின்று பிரமத்தை ஆராய்வதையே மேற்கொண்டன. ஆகமவழி வழிபாடு இதற்கு முற்றிலும் மாறுபட்டு, திருக்கோயில், படிமங்கள் ஆகியவற்றை அமைத்து அபிடேகம் முதலிய செய்வதை விரிவாகப் பேசும். படிமங்கள் வைத்து வழிபடுவோர் சைவ, 资}Qfā了@雌 ஆகமங்களின் அடிப்படையில் ஆணுருவை வைத்து வழிபடுவர். சாக்த ஆகமங்கள்வழி வழிபடுவோர் பெண்ணுருவை வைத்து வழிபடுவர். இவற்றை விரிவாகக் கூறிய அடிகளார் வேதவழிச் செல்பவர், ஆகமவழிச் செல்பவர் ஆகிய அனைவர்க்கும் இறைவன் அப்பாற்பட்டு நிற்கின்றான் என்றே கூறுகின்றாரென நினைக்கத் தோன்றுகிறது. இப்பரந்துபட்ட இந்தியாவின் தென்கோடியிலுள்ள தமிழகத்திலேயே பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் சிவசம்பந்தமுடைய சைவசமயம் தோன்றி வளர்ந்தது என்பர். அப் பழங்காலத்திலேயே இங்கு தோன்றிய சைவம், காஷ்மீரம், நேபாளம் முதலிய இடங்களில் பரவியதோடு இன்று ஈராக் என்று அழைக்கப்படும் சுமேரியாவிலும், தென் அமெரிக்காவிலும் பல்வேறு மாறுபாடுகளுடன் பரவிற்று என்றும் கூறுவர். இந்தியாவைப் பொறுத்தமட்டில் அடிகளார் இப்பகுதியில் கூறும் பல்வேறு சமயப்பிரிவுகள் இருந்துவந்தன. அவை முறையே சைவம், வைணவம், வைதிகம், சாக்தம் முதலிய நெறிகளாம். இந்நெறிகளிற் செல்பவர்கள் முழுமுதற்