பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 திருவாசகம் - சில சிந்தனைகள் பொருளைப் பல்வேறு பெயரிட்டுக் கூறினும் அவனை அடைவதற்குரிய வழிகள் என்று சிலவற்றைத் தேர்ந்து எடுத்து முறைப்படுத்திக் கூறினர். அவற்றில் கூறப்பெற்ற வழியில் சென்றால் தாம்கருதும் கடவுட்பொருளைக் காணலாம் என்று நம்பினர்; கூறினர். இவ்வழிகளில் செல்வோர் சில வழிமுறைகளைப் பின்பற்றிச் சில கடமைகளைச் செய்துவிட்டு அதுவே போதும் என்று கருதுகின்றவர்கள். இவ்வழிகள் அனைத்தும் உண்மைப் பொருளை அறிய உதவமாட்டா என்கிறார் அடிகளார். இவ்வழிகள் அனைத்திலும் 'அன்பு எங்கும் இடம்பெற வில்லை. பின்னர் ஒரு பாடலில் அடிகளாரே 'அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை ஆனந்த மாய்க்கசிந்து உருக, என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்' (திருவாச 22-2 என்று பாடுகிறார். மேலே கூறப்பட்ட மார்க்கங்களில் அன்புக்கு முதலிடம் தராமை அறியப்படும்; அதனாலேயே இறைவன் அவர்களிடம் இருந்து ஒளித்துக்கொள்கிறான் என்கிறார் அடிகளார். . சேண்வயின் ********"י"*******" " "יובנלגלגל נתגלגולגלגלגלגל נוגעלג ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த் துற்றவை துறந்த வெற்றுஉயிர் ஆக்கை அரும்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும் ஒன்றுஉண்டு இல்லை என்றஅறிவு ஒளித்தும் பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் ஒளிக்கும் சோரனைக் கண்டனம் (135-141) உடம்போடு பிறந்ததாகிய ஐம்புலன்களைத் தம்மைவிட்டு வெகுதூரம் செல்லுமாறு அனுப்பிவிட்டு (அடக்கி, பெரிய மலையினிடத்துச் சென்று உணவு முதலியவற்றைத் துறத்தலால் எலும்புந்தோலுமாகிய யாக்கையோடு அருந்தவத்தை மேற்கொள்ளுகின்றவர்களின் புற, அகக்காட்சியுள் அகப்படானாயினான் என்க. எந்த ஒன்றையும் பகுத்துக் காண்பதே அறிவின் செயலாகும். ஆதலால் எல்லாவற்றையும் சுருதி, யுக்தி, அனுமானம்