பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 திருவாசகம் - சில சிந்தனைகள் தொண்டும் செய்தார். இறையுணர்வோடு இத் தொண்டு செய்த காலத்திலும் இறைக்காட்சி கிடைக்கவில்லை என்பதை இன்றே பயில்தொறும் ஒளிக்கும் சோரன் என்றார். 136ஆம் அடிமுதல் 140ஆம் அடிவரை சொல்லப் பெற்றவர்கள் தம்முயற்சியின் பயனைப் பெற்றிருப்பினும் இறைக்காட்சியைப் பெற்றிருக்கவில்லை. என்கிறார். ஆனால் இத்துணைப்பேர்களுடைய முயற்சிக்கும் அப்பாற் பட்டு ஒளித்து நின்ற ஒருவனை இப்பொழுது ஊனக் கண்களாலேயே பார்க்கும் கிடைத்தற்கரிய வாய்ப்புக் கிட்டியதாகலின் கண்டனம்’ என்றார். 'கண்டனம்’ என்பது தன்மைப் பன்மை வினை ஆகும். சிவன் என யானும் தேறினன் (62) என்று தன்மை ஒருமை வாய்பாட்டால் முன்னர்க் கூறியவர், இப்பொழுது 'கண்டனம் என்று கூறுவதன் நோக்கம் என்ன? அடிகளார் குதிரையில் இருந்து இறங்கிக் குருவின் அருகே செல்லும் பொழுது நூற்றுக்கணக்கானவர்கள் சற்றுத் தூரத்தில் இருந்து இக்காட்சியைக் கண்டுகொண்டிருத்தல் வேண்டும். அந்தக் குரு மனிதவடிவில் இருந்தமையின் அவர் இறைவனென்று யாரும் கருதவில்லை. ஆனால் திருவாதவூரர்மட்டும் அவர் இன்னார் என்பதை அறிந்து கொண்டார். ஆகவே, யானும் தேறினன்' என்று தன்மை ஒருமை வாய்பாட்டால் கூறினார். இங்கே தேறுதல் என்பது மனத்துள் நிகழ்கின்ற நிகழ்ச்சியாகும். ஆனால் "சோரனைக் கண்டனம்' என்று கூறும்போது புறக் கண்களால் கண்ட காட்சி ஆதலின் தம்மைப் போலவே சுற்றி நின்றிருந்தவர்களும், அவரைக் கண்டார்கள் ஆதலின் தன்மைப் பன்மை வாய்பாட்டால் கண்டனம் என்று பேசுகின்றார். சோரன் என்று இறைவனைச் சொல்லியது முற்றிலும் பொருத்தமாகும். பிறருடைய பொருளை