பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் : 207 அவர்கள் அறியாமல் வெளவிக் கொள்வோனைச் சோரன் என்று சொல்கின்றோம். எல்லா உயிர்களையும் படைத்து, அந்த உயிர்களின் ஆழ்மனத்தின் அடிப்பகுதியை அவர்கள் அறியாமல் பற்றிக்கொண்டான் ஆதலின் அவன் சோரன் எனப்பட்டான். சோரனது இயல்பு ஒளிந்து கொள்ளுதல் ஆகும். ஆனால் இந்தச் சோரன் ஏனைய சோரர்களைப் போல் வெளியில் ஒளிந்து கொள்ளாமல் உயிர்களின் அடிமனத்தின் ஆத்தில் புகுந்து மறைந்து கொண்டான் ஆதலின் ஒளிக்கும் சோரன்' என்றார். மேலே கூறப்பெற்றவர்கள் அனைவரும் இந்தச் சோரன் உள்ளே ஒளிந்து கொண்டிருப்பான் என்பதை அறியாமல் வெளியே அவனைத் தேடி அலைந்தனர். இங்கே, அங்கே என்று தேடியலைந்தனரே அன்றித் தங்களுக்குள்ளே தேட மறந்தனர். அதனால்தான் அவன் அகப்படவில்லை. ஆழ்மனத்தின் உள்ளே ஒளிக்கும் சோரனாயினும் தான் நினைத்தகாரியத்தை முடிப்பதற்காக, திருவாதவூரர் குதிரைவாங்கப் போகும் வழியில், பலருங் காண வெளிப்பட்டுக் குருவடிவுடன் அமர்ந்து அவரை ஆட்கொண்டு திருவாசகம் பாடவைத்தான். குருவின் குறிக்கோள் அதுவாக இருந்தமையால்தான் அவரைக் கண்டவுடன் திருவாதவூரர்க்கு 'சிவன் என யானும் தேறினன் காண்க என்று சொல்லமுடிந்தது. அத் தெளிவின் காரணமாகவே 'ஒளிக்கும் சோரனைக் கண்டனம்’ என்றார். ஆர்மின் ஆர்மின் நாள்மலர்ப் பிணையலில் தாள்தளை இடுமின் கற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின் பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் (142-145) ஆர்மின் என்பதுமுதல் விடேன்மின் என்பதுமுடிய உள்ள சொற்கள் ஆழமாகச் சிந்திக்கப்பட வேண்டியவை. இறையனுபவம் முற்றாக நிறைந்துபொழுது தற்போதம்