பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 திருவாசகம் - சில சிந்தனைகள் என்பதை அறவே இழந்து ஆனந்த மிகுதியால் சொல்லப் பட்ட சொற்கள் இவை. இதனை மேலைநாட்டுச் சான்றோர் இறையனுபவ முதிர்ச்சியில் விளையும் ஆனந்த வெளிப்பாடு(Divine Ecstasy) என்று கூறுவர். வைணவர் 'பிரேமை’ என்று கூறுவர். இவ் ஆனந்த மேலீட்டில் வெளிவரும் சொற்களை நம்முடைய நிலையில்நின்று பொருள் காண்டல் கடினம். மேலே கூறிய எல்லா நிலையில் உள்ளவர்களுக்கும் தட்டுப்படாமல் ஒளிக்கும் கள்வன் கண்ணெதிரே இங்கு அகப்பட்டான் ஆதலின், எல்லையற்ற ஆனந்த மேலீட்டால் பின்வருமாறு பேசுகிறார். Logoff மாலைகள் கொண்டு அவன் கால்களைப் பிணியுங்கள்; அவன் எங்கும் ஓடிவிடாமல் சுற்றி நின்று பாதுகாவல் செய்யுங்கள். இத்தனை முயற்சிகளையும் மீறி அவன் நழுவிவிட்டால் அவனைத் தொடர்ந்து சென்று விடாமல் பிடியுங்கள் என்கிறார் அடிகளார். இங்ங்னம் தொடர்ந்து செல்பவர்களையும், தாள் தளையிட்டவர்களையும், சுற்றிச் சூழ்ந்து நின்றவர்களையும், ஒருவாறு அவனைப் பற்றிவிட்டோம் என்று நினைப்பவர்களையும் திகைக்க வைத்துவிட்டு அவன் ஒளித்து கெண்டான் என்க. நாங்கள் அவனைப் பற்றிவிட்டோம் என்று நினைத்தவுடன் அவன் மாயமாய் மறைந்து விடுகிறான். தன்நேர் இல்லோன் தானேஆன தன்மை என்நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி அறைகூவி ஆட்கொண்டு அருளி மறையோர் கோலம் காட்டி அருளலும் - (146–149) தனக்கு ஒப்புமை இல்லாதவனாகிய இறைவன் என்னை ஒத்தவர்கள் பலரும் கேட்கும்படி இயம்பினான். எதனை? உன் கண்ணால் காணப்பெறும் நானும் இவ்வடியார் கூட்டமும் ஏனையோர் நினைப்பதுபோல