பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 209 மானிடக் கூட்டம் அல்லோம்; பலருக்கும் ஒளித்து நின்றவன் நானே. இன்று நீ காணவும், கேட்கவும் உன்பால் வந்தோம் என்று இயம்பினார். இதுவே தானேயான தன்மை இயம்பி’ என்ற தொடரின் விளக்கமாகும். 'அறைகூவி முதல் அருளலும் வரையுள்ள பகுதி திருப்பெருந்துறையில் நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறியவாறு ஆயிற்று. குருவாக வந்தவர் மறையோர் கோலத்தில் இருந்தார் என்பது சரி. அறைகூவி ஆட்கொண்டருளி' என்பதன் பொருள் என்ன ? ஒரு விநாடியில் ஆட்கொண்டருளியது உண்மை. ஆனால், எப்பொழுது அறைகூவி அழைத்தார்? முன்பின் பாராததும், புதுமை ஆனதும் ஆகிய ஒரு கூட்டத்தையும், குருவையும் அமைச்சர் ஒருவர் காண்கிறார். எட்டாம் நூற்றாண்டில் பெரும் சிவபக்தனாகிய இரண்டாம் வரகுணன் ஆட்சியில் அடியார் கூட்டங்களை ஆங்காங்கே காண்பது மிகச் சாதாரண நிகழ்ச்சியாகும். எனவே, இந்தக் காட்சியில் அமைச்சருக்கு வியப்பு ஒன்றும் ஏற்படவில்லை. அப்படியிருக்க இவர்கள் அமர்ந்திருந்த வழியைவிட்டு ஒதுங்கி மேலே தம்பயணத்தைத் தொடரவேண்டும் என்று அவர் நினைத்திருக்க வேண்டும். அந்த விநாடியில்தான் உள்மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் புறப்படுகிறது. வாதவூரனே! இங்கே வா!' என்பதுபோன்ற பொருளில் அக்குரல் உள்ளிருந்து கேட்டிருக்க வேண்டும். மனித மனத்தில் ஒரோவழித் தோன்றும் ஓர் இயல்பாகும் இது அதற்குமேல் அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. ஆணைபோன்று தோன்றிய இக்குரல் எதிரேயுள்ள குருவின் அறைகூவல் என்றே நினைக்கின்றார் அடிகளார். உண்மையில் அந்தக் குருநாதர் வாய்விட்டு இவரை அழைக்கவில்லை. அப்படியிருந்தும் அவரிடமிருந்து புறப்பட்ட தெய்வீக அலைகள் திருவாதவூரரைச் சுற்றிவளைத்து, அறைகூவலை