பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 திருவாசகம் - சில சிந்தனைகள் அவரைக் கேட்குமாறு செய்கிறது. அதனால், அந்தக் குருநாதர் தம்மை அறைகூவி அழைத்தார் என்றே அடிகளார் கருதுகின்றார். முன்பின் தெரியாத தம்மை, அமைச்சர் கோலத்தில் நின்ற தம்மை, துறவிகட்கு நடுவே இருந்த குருநாதர் அறைகூவி அழைத்து ஆட்கொண்டார் என்று நினைத்தவுடன் இந்த நிகழ்ச்சி குருநாதரின் எல்லையற்ற அருளால் நிகழ்ந்தது என்று கருதுகிறார். எனவேதான், அறைகூவி ஆட்கொண்டு அருளி என்று கூறுகிறார். 'என்னேர் அனையோர் கேட்க வந்து இயம்பி’ என்ற தொடரை அடுத்து அறைகூவி ஆட்கொண்டு அருளி' என்ற தொடரும் அதனை அடுத்து மறையோர் கோலம் காட்டி' என்ற தொடரும் வருகின்றன. செய்யுள் ஆதலின், முன்பின்னாக இவை கூறப்படினும், இத்தொடர்களைப் பின்வரும் முறையில் வரிசைப் படுத்தவேண்டும். மறை யோர் கோலங் காட்டி', 'அறைகூவி ஆட்கொண்டு அருளி', 'என்னேர் அனையோர் கேட்க இயம்பி’ என்ற முறையில் தொடர்களை அமைக்க வேண்டும். கேட்க’ என்ற சொல்லை அடுத்துள்ள வந்து' என்ற சொல் 'கோலங் காட்டி என்ற தொடரின் பின்னர் சேர்க்கப்பட வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால்தான் திருப்பெருந்துறை நிகழ்ச்சியை செவ்வனே அறிந்து கொள்ள முடியும். உளையா அன்பு என்புஉருக ஒலமிட்டு அலைகடல் திரையின் ஆர்த்துஆர்த்து ஓங்கித் தலைதடு மாறா வீழ்ந்துபுரண்டு அலறிப் பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும் கடைக்களிறு ஏற்றாத் தடப்பெருமதத்தின் ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு - கோல்தேன் கொண்டு செய்தனன். (150–157)