பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம் 13 புதியதொரு வழியைக் கூறிச்செல்கின்றன. அதாவது, பாடலை அல்லது அதிலுள்ள ஒரு பகுதியைப் படித்தவுடன் மனத்தில் அதனோடு தொடர்புடைய பல எண்ணங்கள் தோன்றுவதை இறைச்சிப் பொருள் என்று தொல்காப்பியம் குறிக்கின்றது. இறைச்சிதானே பொருள் புறத்ததுவே என்பது 33ஆவது நூற்பாவாகும். அதாவது, சொல்லப்பட்ட சொற்களின் நேரடிப் பொருள்களை அல்லாமல் அதனோடு தொடர்புடைய பிற எண்ணங்களைத் தோற்றுவிப்பது இறைச்சிப் பொருள் என்று சொல்லப்படும். இதனை அடுத்துவரும் நூற்பா இறைச்சியில் பிறக்கும் பொருளுமாருளவே, திறத்தியல் மருங்கில் தெரியுமோர்க்கே என்பதாகும். தெரியுமோர்க்கே’ என்று கூறியதால், ஆழ்ந்து ஆராய்பவர்க்கு இறைச்சி மூலம் கிடைக்கின்ற பொருளும் உண்டு என்று தொல்காப்பியர் கூறிச் செல்கிறார். தொல்காப்பியர் காலத்தில் பாடலுக்கு இறைச்சிப் பொருள் காணும் பழக்கம் இருந்தது என்பதை இந்நூற்பாக்கள். அறிவித்தாலும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் இதனை நன்கு புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. உவம இயலில் கூறப்பெற்ற உள்ளுறை உவமத்தோடு இந்நூற்பாவையும் சேர்த்துக் குழப்பிக் கொண்டு உரை கண்டனர் பலர். உள்ளுறை உவமத்தில் பாடலிலுள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் உவமம் காணவேண்டும். ஆனால், இறைச்சியில் அவ்வாறில்லை. பாடலிலுள்ள எல்லாச் சொற்களும் ஒன்றுசேர்ந்து அப்பாடலிலுள்ள சொற்கள் குறிக்காத ஒரு பொருளை, ஒரு சிந்தனையைத் தோற்றுவித்தால் அதுவே இறைச்சி எனப்படும். மேலைநாட்டுத் திறனாய்வாளர் இதனைக் குறிப்புப் பொருள் (suggestion) என்று கூறுவர். 20ஆம் நூற்றாண்டில்