பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 211 குறையாத அன்பு காரணமாக என்பு நெக்குருகவும், கடலலைபோல ஆர்ப்பரித்து எழுந்து பின்னர் கீழே வீழ்ந்து புரண்டு அலறவும், பித்தர் மத்தர்போல நடந்து கொள்ளுதலின் நாட்டவர்கள் சிலர் வியக்கவும், சிலர் மருளவும், களிறு, காளை என்பவை மிலைத்தல்போல இன்பவெள்ளத்தைத் தாங்காமல் அரற்றவும், உடலின் பல உறுப்புகளும் மனமும் இனிய தேனால் செய்ததுபோல முற்றிலும் சுவையுடையதாக இருக்குமாறு என்னைச் செய்தனன் என்கிறார் அடிகளார். ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் விழ்வித்து ஆங்கு அன்று அருள்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன் தடம்கையின் நெல்லிக் கனிஎனக்கு ஆயினன் (158-162, இறைவனிடம் போரை ஏற்றுக்கொண்டு வந்தவர் களின் முப்புரத்தையும் தன் புன்னகையால் எரி ஊட்டியவனும், இங்கு கூடியிருந்த அடியவர்களின் உடம்பாகிய குடிலை அழித்து ஒருவரும் தப்பாமல் சோதியில் கலக்குமாறு செய்தவனும் ஆகிய இறைவன், இப்பொழுது என்னைப் பொறுத்தவரை தடக்கையின் நெல்லிக்கனியாயினன் என்கிறார் அடிகளார். “தடக்கையில் நெல்லிக்கனியாயினன் என்பதை o)ffra)fTu 1Lofr.5&# கூறும் உவமையாகக் கொள்ளாமல் அடிகளாரின் வரலாற்றிற்கேற்ப பொருள் கொள்ளுதல் நலம். அடிகளாருக்குத் திருப்பெருந்துறையில் அருள் செய்தவர் மானிட உருவுடன் இருந்தவரே ஆவார். அவரைக் கண்டவுடன் அவர் இறைவனே என்பதை தாம் தெளிந்து தேறியதாக முன்னரே அடிகள் கூறியுள்ளார். அப்படியானால் இந்த மானிட உடலின் உள்ளே உள்ள பெருமானை அவர் கண்டுகொண்டார் என்பது தெளிவாகிறது. அங்கையில் உள்ள நெல்லிக்கனியை