பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 திருவாசகம் - சில சிந்தனைகள் ஆழ்ந்து காண்பார்க்கு, அதனுடைய புறத்தோற்றம்போக, உள்ளே உள்ள நரம்புமண்டலம் முதலியவை நன்கு தெரியுமாப்போலே, மானிட குருவின் உள்ளே இருந்தவரை அடிகளார் அறிந்துகொண்டார் ஆகலின், கையின் நெல்லிக்கனியெனக்கு ஆயினன்' என்றார். அங்கை நெல்லிக் கனியென்று அனைவரும் கூறுவதுபோல் கூறாமல் தடக்கை நெல்லிக்கனி என்று அடிகளார் கூறுவது ஒரு நுண்ணிய வேறுபாட்டைக் கொண்டதாகும். நெல்லிக்கனியை உள்ளங்கையில் நெஞ்சுக்கு நேரே வைத்து மேலிருந்து பார்க்கும்பொழுது அதன் உள்ளேயுள்ள நரம்பு மண்டலத்தை முழுவதுமாகக் காண முடியாது. அதே கனியை, நீட்டிய கையில் வைத்துக் காணும்பொழுது காண்பவருடைய காட்சிக் கோணம் (angle of vision) மாறுபடுவதால் உள்ளேயுள்ள நரம்பு மண்டலத்தின் பெரும் பகுதியைத் தெளிவாகக் காணமுடியும். எதிரேயுள்ள குருவின் ஒரு சில அங்க அடையாளங்களைமட்டும் கண்டுவிட்டு இவர் சிவன் என்று அடிகளார் தேறவில்லை. நீட்டிய கையிலுள்ள கனியை உள்ளும்புறமும் காணுமாப்போலே புவனியில் தீண்டப்பெற்ற சேவடி தொடங்கி குருவின் திருமுடி முடியத் தெளிவாக அவரால் பார்க்கமுடிந்தது என்க. அவருடைய பார்வைக் கோணம் அடிமுடி முழுவதையும் தன்னுள் அடக்கியதாதலின் சிவன் என அவரால் தேற முடிந்தது. சொல்லுவது அறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான்னனைச் செய்தது தெரியேன் ஆஆ. செத்தேன் அடியேற்கு அருளியது அறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன். (163–167) முன்னர் கூறப்பட்ட இறையனுபவப் பேரானந்தத்தின் (divine ecstasy) மற்றொரு பகுதியாகும் இது. தமக்கு