பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 213 நிகழ்ந்த இறை அனுபவத்தை எவ்வாறு வெளியிடுவது என்று தெரியாமல் திகைக்கிறார் அடிகளார். என்னால் தாங்க முடியவில்லையே! இந்த இன்ப அனுபவத்தை முழுவதுமாக விழுங்கவும் முடியாமல், விடவும் முடியாமல் தத்தளிக்கின்றேன். அமைச்சனாக வந்த என்னை எப்படி இவ்வாறு மாற்றினார் என்பதை அறிய முடியவில்லையே’ என்று புலம்புகின்ற அடிகளார் தம்மை, நாயேன்” என்று கூறியதன் நோக்கம் இவ்வளவு பெரிய ஆனந்தத்தைப் பெறுவதற்குத் தாம் எத்துணைத் தகுதியும் இல்லாதவன் என்பதைக் குறிப்பதாயிற்று. அறிவு தொழிற்படுகின்ற நிலையில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் கோவையாக எடுத்துச் சொல்லமுடியும். அந்த நிகழ்ச்சியின் பாதிப்பு அறிவு அளவில் நில்லாமல் அகமனத்தின் ஆழத்திலுள்ள உணர்வுநிலையைத் தொட்டு விடுமாயின் இன்றுங்கூட அதனை முழுவதுமாக எடுத்துக் கூறுதல் இயலாத காரியம். அன்றியும் சொற்களைப் பற்றி ஆய்ந்து கூறிய மேல்நாட்டார் மனிதர்களின் சாதாரண எண்ணங்களை வெளிப்படுத்தக்கூட சொற்கள் சிறந்த கருவியன்று என்று கூறினர். அறிவின் வயப்பட்ட சாதாரண எண்ணங்களைக்கூட வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாத இச்சொற்கள், அகமனத்தின் ஆழத்தில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தத் தகுதியற்றவை என்பது உறுதி. சொல்லின் வேந்தராகிய மணிவாசகர்கூட தம் அனுபவத்தை வெளியிடமுடியாமல் தம்முடைய ஆற்றாமையை வெளியிடுவார்போல, செத்தேன்’ என்று கூறுகின்றார். செழும்தண் பாற்கடல் திரைபுரைவித்து உவாகக்கடல் நள்ளுநீர் உள்.அகம் ததும்ப வாக்குஇறந்த அமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன்......... (168-171)