பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 215

    • ----4 to so கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாய்உடல் அகத்தே குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன்....... (171-175)

நாய்போன்ற கடையேனாகிய என்னுடைய சதைப் பற்று மிகுந்த இவ்வுடலையும், இன்ப அனுபவத்தேனைப் பாய்ச்சி நிரப்புவதற்கு உரிய கொள்கலனாகக் கொண்டான். அற்புதம் என்று சொல்லத்தக்க அந்த இன்ப அனுபவத்தை உடம்புமுழுதும் நிறைத்ததோடல்லாமல் சிறு தாரைகளாக்கி எலும்பின் உள்ளேயும் சென்று தங்குமாறு செய்தான். இந்த ஐந்து அடிகளிலும் இரண்டு சொற்கள் நம் முடைய கவனத்தை ஈர்க்கின்றன. நிரம்பிய என்ற சொல்லும் ஏற்றினன் என்ற சொல்லுமே அவைகளாகும். ‘நிரப்பிய என்று கூறாமல் நிரம்பிய என்று கூறிய அடிகளார், பின்னர் -Յ|(էք5 தாரைகள் எற்புத் துளைதொறும் ஏறின என்று கூறுவதற்குப் பதிலாக ‘ஏற்றினன்' என்று பிறவினை வாய்பாட்டால் கூறியது ஏன் ? திருப்பெருந்துறை நிகழ்ச்சி இரண்டு நிலையில் அமைந்திருத்தலை இவை இரண்டு சொற்களும் அறிவிக்கின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நாய் உடலகத்தே இன்ப அனுபவம் தானாக நிரம்பிய நிலை ஒன்று: எற்புத் துளைகளில் ஏற்றப்பட்ட நிலை ஒன்று. குதிரையிலிருந்து இறங்கிய வாதவூரர் அந்த இடத்திலேயே குருவினிடமிருந்து புறப்பட்ட தெய்வீக அலைகளால் தாக்கப்பெறுகிறார். அந்த விநாடியே அமைச்சர் மறைந்து, அடிகளார் பிறக்கிறார். இவ்வளவு துரத்தில் இருந்துங்கூட அந்த அலைகள் தேனாகப் பெருகி இவருடைய உள்ளத்திலும் உடலிலும்