பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 திருவாசகம் - சில சிந்தனைகள் நிரம்புகின்றன. இவ்வாறு நிரம்புவதற்கு, குருநாதரிடமிருந்து புறப்பட்ட தெய்வீக அலைகள் காரணமேதவிரக் குருநாதர் நேரடியாக இதனைச் செய்யவில்லை. இந்த நிலையில் அடிகளார் மிகுந்த ஈடுபாட்டுடன் அடிமேல் அடிவைத்துக் குருநாதரிடம் செல்கிறார். அவர் திருமுன் சென்று நிற்கின்ற அந்த விநாடிவரை இன்ப அனுபவம் நிறைந்து நின்றது. இந் நிறைவு உடலில் நிறைந்திருந்ததே தவிரக் கடினமான எலும்பினுள் நுழையுமாறில்லை. இது முதல் நிலையாகும். இரண்டாவது நிகழ்ச்சி ஒரு கணநேரத்தில் நிகழ்ந்து முடிந்ததாகும். குருநாதர், புன்முறுவலுடன் வாதவூரரை வரவேற்றுத் தம் திருக்கையால் வருடினார். என்ன வியப்பு: திருக்கையால் வருடியதும் எற்புத்துளைதொறும் ஏதோ ஒன்று புகுந்ததை உணர்கிறார். அத்தகைய ஒர் உணர்வை அந்த விநாடிவரை வாதவூரர் அறிந்ததோ, உணர்ந்ததோ இல்லை. அது என்னவென்று அறிவு ஆராயத் தொடங்கு முன்னரே, அதுவரைத் தம்முள் நிரம்பியிருந்த அமுத தாரைகள் இப்பொழுது எற்புத்துளைதொறும் 'ஏற்றப்பட்டதை' உணர்கிறார். முன்னர் உடம்பு முழுவதும் அமுத தாரைகள் நிரம்பின என்று கூறினார். இப்போது அமுத தாரைகளை 'ஏற்றினன்' என்று கூறுகின்றார். குருநாதரின் ஸ்பரிசம் படுவதற்குமுன்னர் நிகழ்ந்தது, உடல்முழுவதும் நிரம்பிய நிலை; ஸ்பரிசம் பட்டபின்னர் நிகழ்ந்தது எலும்பினுள் அமுத தாரைகள் ஏற்றப்பட்டநிலை, ~ * உருகுவது உள்ளம் கொண்டு ஒர் உருச்செய்தாங்கு எனக்கு அள்ளுறு ஆக்கை அமைத்தனன்....... (175—177) மனம், - சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கிலும் உருகுகின்ற இயல்பு