பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் : 217 மனத்திற்கும், சித்தத்திற்கும் உண்டு. இந்த உருகுகின்ற இயல்பு, மனத்தைப் பொறுத்தமட்டில் சிறிதளவே ஆகும். பல்வேறு உணர்வுகளைத் தன்பால் தாங்கியுள்ள மனம் உருகத் தொடங்கினாலும் ஒரு சிறிதளவே உருகும். அந்த உருக்கந் தானும், நீண்டு நிலைபெற்று இருத்தல் இயலாத காரியம். நிலைபேறானதும் ஆழமானதுமான உருக்கம், மனத்தின் அடியில் உள்ள சித்தத்தில்(உள்ளத்தில் மட்டுமே தோன்றும். மனத்தின் அடிநிலையில் உள்ளதும், அதனோடு தொடர்புடையதுமாகிய உள்ளத்தையே இங்கு அடிகளார் குறிப்பிடுகிறார். உருகுகின்ற உள்ளம், உடலின் ஒருபகுதியாக உடலினுள்ளே இருப்பதாகும். அந்த உள்ளத்தாலேயே உடல்முழுவதும் செய்யப்பெற்றால் எப்படி உடல் முழுவதும் உருகுமோ அப்படிப்பட்ட ஓர் உருகும் ஆக்கையை (உடலை எனக்கு அமைத்தனன் என்கிறார். ஆக்கை அமைத்தனன் என்று அடிகளார் கூறுவது சிந்திக்கத் தக்கதாகும். அமைத்தல் என்ற சொல் ஏற்கனவே உள்ள பொருளைக்கொண்டு புதிய வடிவுடன் ஒன்றைச் செய்தலையே குறிக்கும். மூங்கிலையும் கீற்றையும்கொண்டு பந்தல் போடுவதைப் பந்தல் அமைத்தார்’ என்று கூறுவதுண்டு. அதுபோலத் திருவாதவூரரின் பழைய உடம்பில் இறை அனுபவம் என்ற தேன் நிரம்புமாறு செய்தார் குருநாதர். அடுத்து உடல் முழுதும் நிரம்பிய தேன் எற்புத் துளைதொறும் ஏற்றப்பெற்றது. எனவே இந்த உடம்பு பழைய தன்மையை இழந்து புதிய தன்மையைப் பெற்றது, பழைய உடம்பினுள் எங்கோ ஒரு மூலையில் இருந்த உள்ளம் ஒரோவழி உருகும் தன்மை பெற்றிருந்தது. குருநாதர் கட்புலனாகாத அவ் உள்ளத்தை எடுத்து அதனுள் தேனை நிரப்பினார். அம்மட்டோடு நில்லாமல் அவ் உள்ளம் தங்கியுள்ள உடம்பைத் தாங்கிநிற்கும் எலும்புகள் அனைத்திலும் இந்த அமுத தாரைகளை ஏற்றினார். அதனால் உருகும்.உள்ளத்தின் இயல்பை உடல்