பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 திருவாசகம் - சில சிந்தனைகள் முழுவதும்பெற்று உருகுவதாயிற்று. எனவே, பழைய உடம்பை எடுத்துச் சில மாற்றங்களைச் செய்த குருநாதர் முழுதும் உருகும் உடம்பாக அதனை மாற்றினார். இவ்வளவு கருத்துக்களையும் பெறவைக்க 'ஆக்கை அமைத்தனன் என்ற அற்புதமான சொற்றொடரைப் பயன்படுத்துகிறார் அடிகளார். ஏனய பக்தி நூல்களில் அதிகம் காணப்பெறாத ஒரு கருத்தாகும் இது. உடம்பு எலும்பு, தோல், தசை முதலிய உருகும் இயல்பைப்பெறாத உறுப்புக்களால் ஆயதாம். இவ் உறுப்புக்கள்கூட உள்ளத்தின் தன்மையைப் பெற்று உடல் முழுவதும் அன்புவடிவாக, அன்புப் பிழம்பாக இதற்கு முன்னர் வாழ்ந்தவர் கண்ணப்பர். உருக்கம் என்றால் அவரைப்போன்ற உருக்கத்தை பெறவேண்டும் என்பது அடிகளாரின் விருப்பம். இதனாலேயே கண்ணப்பர் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் (திருவாச. 10-4) என்று பின்னரும் பாடுகின்றார். திருப்பெருற்துறையில் குருநாதரின் எதிரே இருக்கும்பொழுது அடிகளாருக்கும் இந்த நிலை ஏற்பட்டது. அதனைத்தான், உருகுகின்ற உள்ளத்தால் செய்ததுபோன்ற ஓர் உடம்பை இப்பொழுது தந்தனன் என்று இங்கே குறிப்பிடுகிறார். குருநாதர் எதிரே இருக்கும்பொழுது ஏற்பட்ட அனுபவத்தை இதுவரை அடிகளார் கூறினார். இனி, அவர் மறைந்துவிட்ட பிறகு தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பின்வரும் அடிகளில் பேசுகிறார். 事略我●曲串***-****争稳专**●●-●●●ஒள்ளிய கன்னல் கனிதேர் களிறுஎனக் கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன், என்னில் கருணை வான்தேன் கலக்க அருளொடு பராஅமுது ஆக்கினன் பிரமன் மால்அறியாப் பெற்றி யோனே. (177–182)