பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 219 கடித்து, சுவைத்து உண்ணவேண்டிய கரும்பினையும் எளிதாக உண்ணுகின்ற பழத்தினையும் ஒருசேர உண்கின்ற யானைபோல என்னை இங்கே இருத்தினார். உடன் இருந்தவர்களெல்லாம் அவரோடுசெல்ல, கடைசியாக அவரோடு சேர்ந்த என்னை, கடைமாணாக்கனாகக் கருதி இங்கேயே இருக்குமாறு பணித்துவிட்டு மறைந்தார் என்க. - இறைவன், தேன்போன்றதாகிய தனது மாப்பெருங் கருணையை, கடையவனாக இருப்பினும், என் மூலம் வெளிப்படுமாறு செய்தான். அக்கருணை அவனைத் துதிசெய்யும் பாடல்களாக(திருவாசகமாக) என் மூலம் வெளிப்படுவதற்காகவே என்னை இங்கே விட்டுச் சென்றனன் போலும். அங்ங்ணம் விட்டுச்சென்றவன் யார் என்பதைப் புரிந்து கொண்டேன். அவன் நான்முகனும் திருமாலும் காணாத பெற்றியோனாவான். இதுவரை பல இடங்களிலும் தம்மை நாய் என்றே குறிப்பிட்டுவந்த அடிகளார். இப்பொழுது யானை என்று கூறுவதன் நோக்கமென்ன? வலிய கரும்பையும் ம்ென்மையான கனியையும் ஒருசேர உண்கின்ற யானை போல உலகியல் துன்பம், கருணையாகிய இன்பம் என்ற இரண்டையும் சமதிருஷ்டியுடன் ஏற்றுக்கொள்ளும் இயல்பைப் பெற்றுவிட்டார் ஆதலின் யானை இங்கு உவமையாயிற்று. குருநாதர் தம்மை விட்டுச்சென்றது, பேரிழப்பு என்று கருதித் தொடக்கத்தில் வருந்தினாலும் என்ன காரணத்தால் விட்டுச்சென்றார் என்பதை உள்ளுணர்வு தெளிவிக்க அதனை இங்கே அடிகளார் கூறுகிறார். ‘என்னில் அருளொடு கருணை வான்தேன் கலக்க பரா அமுது ஆக்கினன்' என்று மிக விளக்கமாகவும், அற்புத மாகவும் சொற்களை அமைக்கின்றார் அடிகளார். திருவாசகம்போன்ற ஈடு இணையற்ற ஒரு 'பராஅமுது'