பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திருவாசகம் - சில சிந்தனைகள் வாழ்ந்த T.S.எலியட் என்ற கவிஞர் அப்ஜெக்டிவ் (objective). GirtfiGod tą cii (correlative) argöng g)ggiosará; கூறுகின்றார். 20ஆம் நூற்றாண்டில் மேலைநாட்டுத் திறனாய்வாளர் கூறிய இக் கருத்தை 2500 ஆண்டுகளின் முன்னர்த் தொல்காப்பியனார் கூறியுள்ளமை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த அடிப்படையில் திருவாசகத்தைப் படிக்கும் பொழுது அதில்வரும் சொற்கள் தரும் நேரடிப் பொருள் ஒருபுறமிருக்க, என்ன இறைச்சிப் பொருளை, இந்த ஆசிரியன் மனத்தில் தோற்றுவித்தது என்பதே இந்நூலின் கருவாகும். இவ்வாறு கூறுவதை யாவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்றோ, ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ இந்த ஆசிரியன் எதிர்பார்க்கவில்லை. இப்படியும் பொருள் கூற இடமுண்டு என்ற முறையிலேயே இந்நூல் செல்கின்றது. இது தவறாக இருப்பின் மணிவாசகப் பெருமான் என்னை மன்னிப்பாராக, - அ. ச. ஞானசம்பந்தன் சென்னை-83 ԼDՈrfr5-99