பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 221 பண்டுதொட்டே திரிமூர்த்திகள் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்கின்றனர் என்ற கருத்து இந்நாட்டில் பரவியிருந்தது. இவர்கள் மூவரையும் படைத்து அவர்களுக்கு உரிய பணிகளைச் செய்யுமாறு பணிப்பவன் சிவபெருமானே என்ற கருத்து அடுத்துப் பேசப்படுகிறது. சீடர்கள் புடைசூழ மானிடவடிவில் இருந்த குருவைக் கண்டமாத்திரத்தில் அவ்வடிவில் இருப்பவர் இறைவனே என்று கண்டுகொண்டேன் என்று அடிகளார் அறுதியிட்டுச் சொல்கின்றபகுதி இந்த அகவலில் இடம் பெற்றுள்ளது. குருவின் திருவருள் வாதவூரருள் பாய்ந்த பின்னர் அவரைநிரப்பி, அவர் அருளாலேயே திருவாசகம்’ என்னும் மாபெரும் ஆறாக வெளிப்பட்டது என்பதை அடிகளாரே அடுத்துக் கூறுகிறார். அற்புதமானதும், உலக இலக்கியங்களில் ஈடு இணை அற்றுக் காணப்படுவதுமாகிய ஒரு முற்றுருவகத்தில் ஞான குருவாகிய மேகத்ததால் சிவபோகப்பயிரை விளைக்கும் வகை இப்பகுதியில் பேசப்பெறுகிறது. மானிட வடிவிலிருந்த குருவானவர் சிவபரம் பொருளே என்பதை உணர்ந்ததால் வாழ்க’ என்றும், போற்றி என்றும் வழிபடுவதும் இப்பகுதியிலாகும். உலகிடைக் காணப்படும் பல்வேறு சமயவாதிகளும் தத்தமக்குரிய வழிகளில் சென்று பரம்பொருளைக் காணும் முயற்சி அனைத்திலும் அவர்கள் எண்ணம் ஈடேறாதபடி, தன்னை ஒளித்துக் கொள்ளும் பரம்பொருள், தம்மை 'அறைகூவி ஆட்கொண்ட அற்புதத்தையும் இப்பகுதியில் கூறுகிறார். சிறந்த குதிரைகளைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், அமைச்சருக்குரிய பாணியில் செல்லும் ஒருவரை, பேரண்டத்தைவிடப்