பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 திருவாசகம் - சில சிந்தனைகள் பெரியவனான ஒருவன் அறைகூவி அழைத்து நனவே பிடித்து ஆட்கொண்டான்'(திருவாச 1-10) என்று நினைத்தவுடன் அந்த மாபெரும் பொருளின் எளிவந்த தன்மை (செளலப்யம்) அடிகளாரின் உள்ளத்தை நீராய் உருக்குகிறது. இச்சிறப்பும் இந்த அகவலில் பேசப் பெற்றுள்ளது. இறைக் காட்சி பெற்றவர்கள் அந்தப் பேரானந்தத்தில் திளைத்து வெளிவருகின்ற நிலையில் பேசும் பேச்சுக்களும் இப்பாடலில் இடம் பெற்றுள்ளன. தெய்வீகப் பேரானந்தத்தில் (divine eostasy) தோன்றும் ஓர் அற்புதம் இப்பாடலின் நிறைவுப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. உடல் முழுவதும் நிரம்பிய பேரானந்தம் எலும்புக்களுக்குள்ளும் பாய்ந்து கற்பனைக்கு அடங்காத இன்பத்தை தருவதே ஆகும் அது. சிவபுராணம் முழுவதும் ஈசனது பெருமைகளைக் கூறியதுபோல் திருஅண்டப்பகுதி ஈசனால் ஆட்கொள்ளப் பெற்ற ஓர் அன்பரின் அனுபவத்தைப் பேசுகிறது. @ ó @