பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போற்றித் திருஅகவல் நான்முகன் முதலா வானவர் தொழுதுஎழ ஈரடி யாலே முவுல களந்து நாற்றிசை முனிவரும் ஜம்புலன் மலரப் போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மால்அன்று அடிமுடி அறியும் ஆதர வதணிற் கடுமுரண் ஏனம் ஆகி முன்கலந்து ஏழ்தலம் உருவ இடந்து பின்எய்த்து ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியுங் காணா மலரடி இணைகள் வழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில் யானை முதலா எறும்பி றாய ஊனமில் யோனியின் உள்வினை பிழைத்தும் மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும் அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் 10 15 20 25