பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 திருவாசகம் - சில சிந்தனைகள் சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர் தாயே யாகி வளர்த்தனை போற்றி மெய்தரு வேதியன் ஆகி வினைகெடக் கைதர வல்ல கடவுள் போற்றி ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக் காரமு தானாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின்னார் உருவ விகிர்தா போற்றி கல்நார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா என்தனக் கருளாய் போற்றி படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி இடரைக் களையும் எந்தாய் போற்றி ஈச போற்றி இறைவ போற்றி தேசப் பளிங்கின் திரளே போற்றி அரைசே போற்றி அமுதே போற்றி விரைசேர் சரண விகிர்தா போற்றி வேதி போற்றி விமலா போற்றி ஆதி போற்றி அறிவே போற்றி கதியே போற்றி கனியே போற்றி நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி உடையாய் போற்றி உணர்வே போற்றி கடையேன் அடிமை கண்டாய் போற்றி ஐயா போற்றி அணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி நெறியே போற்றி நினைவே போற்றி 90 95 100 105 110 甘15