பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் 227 வானோர்க் கரிய மருந்தே போற்றி ஏனோர்க் கெளிய இறைவா போற்றி மூவேழ் சுற்றம் முரண்உறு நரகிடை ஆழா மேயருள் அரசே போற்றி - தோழா போற்றி துணைவா போற்றி - 120 வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி முத்தா போற்றி முதல்வா போற்றி அத்தா போற்றி அரனே போற்றி உரையுணர் விறந்த ஒருவ போற்றி விரிகட லுலகின் விளைவே போற்றி 125 அருமையில் எளிய அழகே போற்றி கருமுகி லாகிய கண்ணே போற்றி மன்னிய திருவருள் மலையே போற்றி என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி 130 தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி அழிவிலா ஆனந்த வாரி போற்றி அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி முழுவதும் இறந்த முதல்வா போற்றி மானேர் நோக்கி மணாளா போற்றி 135 வானகத் தமரர் தாயே போற்றி பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் பேற்றி வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி 140 வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி அளிபவர் உள்ளத் தமுதே போற்றி கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி நனவிலும் நாயேற் கருளினை போற்றி இடைமரு துறையு மெந்தாய் போற்றி 145