பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 திருவாசகம் - சில சிந்தனைகள் சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீர்ார் திருவை யாறா போற்றி அண்ணா மலையெம் அண்ணா போற்றி கண்ணா ரமுதக் கடலே போற்றி 150 ஏகம் பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு வானாய் போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி 155 குற்றா லத்தெம் கூத்தா போற்றி கோகழி மேவிய கோவே போற்றி ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி கடம்பூர் மேவிய விடங்கா போற்றி 160 ஆடைந்தவர்க் கருளும் அப்பு போற்றி இத்தி தன்னின் கீழிரு மூவர்க்கு அத்திக் கருளிய அரசே போற்றி தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி 165 ஏனக் குருளைக் கருளினை போற்றி மானக் கயிலை மலையாய் போற்றி அருளிட வேண்டும் அம்மான் போற்றி இருள்கெட அருளும் இறைவா போற்றி தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி 170 களங்கொளக் கருத அருளாய் போற்றி அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி நஞ்சே அமுத நயந்தாய் போற்றி அத்தா போற்றி ஐயா போற்றி நித்தா போற்றி நிமலா போற்றி 175