பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் 229 பத்தா போற்றி பவனே போற்றி பெரியாய் போற்றி பிரானே போற்றி அரியாய் போற்றி அமலா போற்றி மறையோர் கோல நெறியே போற்றி முறையோ தரியேன் முதல்வா போற்றி 飞80 உறவே போற்றி உயிரே போற்றி சிறவே போற்றி சிவமே போற்றி மஞ்சா போற்றி மணாளா போற்றி பஞ்சே ரடியாள் பங்கா போற்றி அலந்தேன் நாயேன் அடியென் போற்றி 185 இலங்கு சுடரெம் ஈசா போற்றி கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி மலைநா டுடைய மன்னே போற்றி கலையார் அரிகே சரியாய் போற்றி 190 திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி அருவமும் உருவமும் ஆனாய் போற்றி மருவிய கருணை மலையே போற்றி துரியமும் இறந்த சுடரே போற்றி - 195 தெரிவரி தாகிய தெளிவே போற்றி தோளா முத்தச் சுடரே போற்றி ஆளா னவர்கட் கன்பா போற்றி ஆரா அமுதே அருளே போற்றி ப்ேரா யிரமுடைப் பெம்மான் போற்றி 200 தாளி அறுகின் தாராய் போற்றி நீளொளி ஆகிய நிருத்தா போற்றி சந்தனச் சாந்தின் கந்தர போற்றி சிந்தனைக் கரிய சிவமே போற்றி மந்திர மாமலை மேயாய் போற்றி 205