பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. போற்றித் திருஅகவல் சிந்தனைகள் திருவாசகத்தின் முற்பகுதியிலுள்ள நான்கு அகவல்களில் நான்காவதாக அமைந்துள்ளது போற்றித் திருஅகவல் ஆகும். போற்றுதல் என்ற சொல் வழிபடுதல் என்ற குறிப்பையும் தருவதாகும். வடமொழியாளர் நம’ என்ற சொல்லால் எதனைச் சுட்டினரோ அதனையே போற்றி என்ற சொல்லுக்கும் பொருளாகக் கொள்ளலாம். முதலில் அமைந்துள்ள சிவபுராணம் ஒரளவு இறைவனது தன்மையைக் கூறி, உயிர்வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சியையும் வெளிப்படுத்தியதோடு, இறைவனை வழிபடுவதே உயிர்களின் &#${_{GT}} | }} என்பதையும் அறிவுறுத்திற்று. உயர்வு அற உயர்ந்தவன் இறைவன் என்றும், மிகுதியும் இழிந்தவை உயிர்கள் என்றும் கூறினால், அந்த இறைவன் உயிர்களுக்கு எட்டாக் கணியாய் இருந்து விடுவானோ என்று ஐயுறுவார்க்கு விடை கூறுவதுபோல கீர்த்தித் திருஅகவல் இரண்டாவதாக அமைந்துள்ளது. கீர்த்தித் திருஅகவலின் தொடக்கம் பற்பல கதைகளைக் குறிப்பதன் மூலம் இறைவனுடைய எளிவந்த தன்மையை (செஸ்லப்பியத்தை விரிவாகக் கூறுகிறது. w இறங்கிவந்து அருள் செய்கிறான் என்றவுடன் நம்மையும் அறியாமல் அவனுடைய சிறப்பைக் குறைத்து விடுவோமோ என்று கருதிப்போலும் திரு அண்டப்பகுதி,