பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 திருவாசகம் - சில சிந்தனைகள் காணப்படுகின்ற பிரபஞ்சத்தை வைத்து அவன் இதனை விடப் பெரியவன் என்று தொடங்குகிறது. ஓர் அறிவு உயிர் முதல் ஆறு அறிவு உயிர்வரைப் பல்வேறு பிறப்புகளை எடுத்த இந்த ஆன்மா, தன்னுடைய குறிக்கோளை நோக்கிப் பயணம் புறப்படுவதை, போற்றித் திருஅகவல் குறிப்பிடுகின்றது. அந்தப் பயணத்தில் நேரும் பல இடையூறுகளும், அவற்றைக் கடந்து செல்லும் ஆன்மா தெய்வம் என்பது ஒர் சித்தம் உண்டாகிய நிலையை அடைதலும், அதன்மேல் தொடர்கின்ற இடையூறுகளும் விரிவாகப் பேசப்படுகின்றன. முடிவாக இறைவனிடத்துத் தன்னை ஒப்படைக்கும் ஆன்மா, பலவாறு அவன் பெருமைகளைக் கூறிப் போற்றி போற்றி என்று வழிபடுகின்றது. இந்தப் நீண்ட பாடலே போற்றித் திருஅகவல் என்று சொல்லப்படுகிறது. நான்முகன் முதலா வானவர் தொழுதுஎழ ஈர் அடியாலே மூஉலகு அளந்து நால்திசை முனிவரும் ஐம்புலன் மலரப் போற்றிசெய்ததிர்முடித் திருநெடுமால் அன்று அடிமுடி அறியும் ஆதரவு அதனில் கடும்முரண் ஏனம் ஆகி முன்கலந்து ஏழ்தலம் உருவ இடந்து பின்எய்த்து ஊழி முதல்வ சயசய என்று வழுத்தியும் காணா மலர்அடி இணைகள் வழுத்துதற்கு எளிதாய் ..........*兽争命●穆攀够●*** (1-10) 'பயந்தவர்களும் இகழ் குறளனாகத் (கம்பன் வேள்வி-34 தோன்றிய திருமால் விசுவரூபம் எடுத்து மூவுலகையும் ஈரடியால் அளந்தபொழுது அத்திருமாலின் பாதங்களை நான்முகனும் வானவர்களும் தொழுது ஏத்தினார்கள். அத்துணைச் சிறப்புடைய திருமால், மிக்க வலிமையுடைய, வராக வடிவெடுத்து இறைவனுடைய திருவடியைக் காணவேண்டும் என்ற எண்ணத்தோடு