பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 233 எல்லாக் கீழ் உலகங்களையும் அகழ்ந்து சென்றுங் காணமுடியாத திருவடிகள் என்க. இறுதியில் திருமால் தனது இயலாமையை உணர்ந்து, அனைத்திற்கும் மூலமாக இருக்கின்ற பரம்பொருளே என்று போற்றியுங்கூடக் காணமுடியாத மலரடிகள் என்க. திருஅண்டப்பகுதியில் கற்பனைக்கு எட்டாமல் விரிந்து செல்கின்ற பேரண்டத்தை விளக்கிவிட்டு, அத்தகைய பேரண்டமும் துகள் என்று எண்ணும்படியாக அதனைவிட மிகமிகப் பெரியவனாக உள்ளான் இறைவன் என்று அடிகள் கூறியுள்ளமை இங்குச் சிந்திப்பதற்குரியது. அவ்வளவு பெரியவனாக இருக்கின்ற ஒருவனுடைய திருவடிகளைத் திருமால் காணமுடியாமை வியப்பிற்கு உரியது என்கிறார் அடிகளார். காண முயன்றவன் சாதாரணமானவன் அல்லன்; ஈரடியால் மூவுலகை அளந்தவன். நான்முகன், தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் மூவுலகு அளந்த அத்திருவடியைத் தொழுது தூமலரிட்டு வணங்கினர் என்றால் திருமாலின் பெருமை எத்தகையது என்பதை அறிவுறுத்தினாராயிற்று. இத்துணைச் சிறப்புடைய திருமால், ஏன் இறைவன் திருவடியைக் காணமுடியவில்லை என்ற வினாவிற்கு விடை கூறுவார்போல அடிமுடி அறியும் ஆதரவு அதனில் என்ற தொடரை அமைக்கின்றார். அதாவது நான்முகனும் திருமாலும் ஆணவ அடிப்படையில் தம்முள் முரணி இறைவனது அடிமுடியைக் காண முற்பட்டனர். திருமால் திருவடியைக் காண முற்பட்டது அதனை வணங்கவேண்டும் என்ற கருத்தால் அன்று. நான்' கண்டுவிட்டேன் என்று பெருமையடித்துக் கொள்வதற்கே ஆகும். எனவேதான் திருவடிகளைக் காணமுடியவில்லை. அந்நிலையில் ஊழி முதல்வ சயசய’ என்று வழுத்திய பின்பும் திருவடிகளைக் காண முடியவில்லை என்று கூறியது ஏன்? கருணைக் கடலாகிய இறைவன் உள்ளன்போடு தன்னை வழுத்துபவர்களை ஆதரித்துத்