பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 திருவாசகம் - சில சிந்தனைகள் திருவடிக் காட்சி நல்குவான். இந்த இறைஇயற்கைக்கு மாறாகத் திருமால் வழுத்திய பொழுதும் திருவடிக்காட்சி கிடைக்கவில்லை என்றால் அதன் காரணமென்ன? அடியார்கள் வழுத்துவதற்கும், திருமால் வழுத்தியதற்கும் வேறுபாடு உண்டு என்க. ஏனமாகி இடந்து சென்று காணமுற்பட்டது ஆணவத்தின் காரணமாக ஆகும். அது நடவாதபோது வழுத்தத் தொடங்குகிறான். இந்த வழுத்தலில் ஆணவத்தைத் துறந்த பணிவோ, அன்போ இல்லை. அதன் மறுதலையாக தோல்வியால் ஏற்பட்ட நாணத்தை மறைக்க வழுத்துதல் ஆகிய புதிய உத்தியைக் கையாண்டான் என்க. இப்புதிய உத்தியின் அடித்தளத்தில், 'தான் வெற்றிபெற வேண்டும் என்ற ஆணவம் உள்ளடங்கி இருத்தலை எளிதாக அறியமுடியும், திருமால் வழுத்தியுங் காணா மலரடி இணைகள் என்று முன்னர்க் கூறியதால் ஓர் ஐயம் பிறக்கும். நான்முகனே வழிபடும் திருமால்கூட வழுத்தியும் அம்மலரடிகளைக் காணமுடியவில்லை என்றால், ஏனையோர்க்குத் திருவடி தரிசனம் இயலாத காரியம் என்ற நினைவு தோன்றுமன்றே! அந்த ஐயத்தைப் போக்குவதற்காக உடனேயே வழுத்துதற்கு எளிதாய்’ என்று பேசுகிறார். யாருக்கு இது எளிதாகும் என்ற வினாவிற்கு விடை பின்னர் பேசப்பெறுகிறது. ............. வார்கடல் உலகினில் யானை-முதலா எறும்பு ஈறுஆய ஊனம்இல் யோனியின் உள் வினை பிழைத்தும் (10-12) உயிர்கள் எண்பத்து நான்கு இலட்சம் வகையான உடல்களில் புகுந்து புறப்படுகின்றன. இதனைத் திருஞானசம்பந்தர் தேவாரத்திலும்(திருமுறை : 1-1324) சிவஞானசித்தியாரிலும்(சூத் : 2-89 கண்டுகொள்ளலாம். அடிகளார் காலம்முதல் இன்றுவரை மிகப்பெரிய வடிவுடைய உடலுக்கும் மிகச்சிறிய வடிவுடைய