பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 235 உடலுக்கும் முறையே யானையும் எறும்பும் எடுத்துக் காட்டாகக் கூறப்பெறுகின்றன. மிகப்பெரிய யானையாக இருப்பினும் மிகச்சிறிய எறும்பாக இருப்பினும் அவற்றின் பெண் இனத்திற்குக் கருப்பை, யோனி என்பவை உண்டு. இவற்றின் மூலம் வடிவெடுத்து வெளியே வருகின்ற உயிர்கள் படுத்துன்பமும், வளர்ச்சியின் இடையில் நிகழும் மரணமும் மிக அதிகமாகும். இவ் அடிகளின் பின்னர் மானிட உயிர் கருப்பையில் வளர்ந்து வெளிவருவதற்குரிய பத்து மாதங்களில் தோன்றும் இடையூறுகளை வரிசைப் படுத்துகின்றார் அடிகளார். ஆனால், இத் துன்பமும் இடையில் நிகழும் ஆபத்துக்களும் பெரும்பான்மையும் மானிட உயிர்களுக்கே உரியன. யானை முதல் எறும்பு ஈறாய உயிர்கட்கு, கரு முழுவடிவு பெற்று வெளிவரும் பொழுது ஏற்படும் சிறுதுயரத்தைத் தவிர வேறு துயரங்கள் அதிகமாகக் காணப்படுவதில்லை. காரணம் அவை இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்வதால் என்க. எனவே இவற்றைத் தனியே பிரித்து அடிகளார். பேசுகிறார். மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் முழ்ழுதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈர்இரு திங்களில் பேர்இருள் பிழைத்தும் அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும் ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும், ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தக்க தசமதி தாயொடு தான்படும் - துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் (13–25) மேலே உள்ள பதின்முன்று அடிகளில், மானிட உடம்பைப் பெறும் உயிர், கருவாகும் நிலையில் தொடங்கி